Sanga Seithigal

எழுத்தாளர்கள் சங்கத் தலைவராக தி்ரு.விக்ரமன் வெற்றி


தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவராக நமது இயக்குநர் சங்கத் தலைவர் திரு.விக்ரமன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

  தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். எழுத்தாளரும், இயக்குநருமான விசு தலைமையிலான நிர்வாகம் பொறுப்பு வகித்து வந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக இச்சங்கத்துக்கு தேர்தல் நடைபெறாமல் இருந்து வந்தது.

 இந்த நிலையில் உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின் படி சென்னையில் இன்று தேர்தல் நடைபெற்றது.

 சென்னை கே.கே.நகர் பாரதிதாசன் காலனி சமுதாய நலக் கூடத்தில் காலை 9 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது. இத்தேர்தலில் 292 சங்க உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

 வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் இயக்குநர் விக்ரமன் 205 வாக்குகள் பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 எழுத்தாளரும், பாடலாசிரியருமான பிறைசூடன் 150 வாக்குகள் பெற்று செயலாளராக தேர்வாகியுள்ளார்.

மேலும் துணைத்தலைவர்களாக பஞ்சு அருணாச்சலமும், யார் கண்ண்னனும் வெற்றி பெற்றுள்ளனர்

இணைச்செயலாளர்களாக வி.பிரபாகர், டி.கே.சண்முகசுந்தரம், சி.ரங்கனாதன், பா.விஜய் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

Realted News

சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா

Read More

காவியத் தலைவன் – விமர்சனம்

Read More

பேரரசு இயக்கத்தில்

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்