Sanga Seithigal

நடிகர் விவேக் மகன் இறப்பு


 உடல் நல பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக்கின் மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு அமிர்தாநந்தினி, தேஜஸ்வனி என்ற இரண்டு பெண் குழந்தைகளும், பிரசன்ன குமார் (13) என்ற மகனும் உண்டு. இவர்களில் பிரசன்ன குமார் மூளை காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டார். கடந்த ஒன்றரை மாத காலமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று  பிரசன்ன குமாரின் உயிர் பிரிந்தது. மகனின் இறப்பு   நடிகர் விவேக்கை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்தில்தான் விவேக்கின் தந்தை காலமானார். அந்த சோகம் மறைவதற்குள்ளாகவே விவேக்கின் மகனும் இறந்தது, அவரது குடும்பத்தினரை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விவேக் மகன் மறைவுக்கு இயக்குநர் சங்க பொருளாளர் பேரரசு, இணைச் செயலாளர் ஏகம்பவாணன், செயற் குழு உறுப்பினர்கள் நம்பிராஜன்,ரங்கநாதன், விருமாண்டி, ஆர்.கே. கண்ணன் மற்றும் நிர்வாகிகள்  டி.கே. சண்முகசுந்தரம் மற்றும் உதவி இயக்குநர்கள் கலந்து கொண்டு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டனர்.

Realted News

சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா

Read More

காவியத் தலைவன் – விமர்சனம்

Read More

கால்பந்தாட்டம் பற்றிய படம் “ ஐவராட்டம் “

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்