Sanga Seithigal

பொதுக்குழு- 2015 இனிதே முடிந்தது..!


இன்று காலை 9:00 மணியளவில் பொதுக்குழு கூட்டம் கமலா திரையரங்கில் தமிழ்தாய் வாழ்த்துடன் ஆரம்பிக்கப்பட்டது. ரமேஷ் கண்ணா அவர்கள் தொகுத்து வழங்கினார். 

முதலில் தலைவர் உரையுடன் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது. பிறகு பொதுச்செயலாளர் திரு ஆர்.கே.செல்வமணி அவர்கள் உரையாற்றுகையில் இதற்கு முன் சங்கத்தில் 1000 - 1500 உறுப்பினர்களிலிருந்து 2500 ஆக உயர்ந்து இருப்பதால் நிர்வாகப் பணிகளை மேற்கொள்வதற்கு வசதியாக இணைச்செயலாளர்களில் 1 எண்ணிக்கையை சேர்த்து 4 லிருந்து 5 ஆக உயர்த்தியும், செயற்குழு உறுப்பினர்களில் 5 எண்ணிக்கையை மேலும் சேர்த்து , 12 லிருந்து 17 ஆகவும் உயர்த்தி  ஏற்கனவே சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது என்பதை தெரிவித்தார். அதைத் தொடர்ந்து நிறவேர்ரப்பட வேண்டிய தீர்மானங்களை தெரிவித்தார்.

முதல் தீர்மானம்

  1. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தி சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் படவேண்டும்.  தலைவர்-1,  பொதுச்செயலாளர் -1, பொருளாளர்-1, துணைத்தலைவர்கள்-2, இணைச் செயலாளர்கள்-5 செயற்குழு உறுப்பினர்கள்-17  என மொத்தம் இருபத்தேழு (27) பேர் தேர்ந்தெடுக்கப் பட வேண்டும்

மேலும் வருங்காலத்தில் சங்கத்தின்  உறுதியான செயல்பாடுகளுக்காக  துணை விதிகள் திருத்த வேண்டியுள்ளது என்பதை தெரிவித்தார்.

துணைவிதிகள் திருத்தங்கள்

இணை, துணை, உதவி இயக்குநர் உறுப்பினர்கள் பிரிவிலிருந்து, 2 இணைச்செயலாளர்கள் பதவிகள்,  7 செயற்குழு உறுப்பினர்கள் பதவிகள் என மொத்தம் 9 பதவிகளுக்கு மட்டும் போட்டியிடலாம்

     தலைவர், துணைத்தலைவர்கள், செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு போட்டியிடும் இயக்குநர் உறுப்பினர்கள், சங்கத்தில் உறுப்பினராகி ஐந்து ஆண்டுகள் சந்தா செலுத்தியவர்களாக இருக்கவேண்டும். அத்துடன் மூன்று நேரடி தமிழ்ப்படங்கள் இயக்கி, அந்த படங்கள் தணிக்கை செய்யப்பட்டு வெளிவந்திருக்க வேண்டும்.

  • இணைச்செயலாளர்கள் பதவிக்கு போட்டியிடும் இயக்குநர் உறுப்பினர்கள்,  சங்கத்தில் உறுப்பினராகி ஐந்து ஆண்டுகள் சந்தா செலுத்தியவர்களாக இருக்கவேண்டும். அத்துடன் மூன்று நேரடி தமிழ்ப்படங்கள் இயக்கி, அந்த படங்கள் தணிக்கை செய்யப்பட்டு வெளிவந்திருக்க வேண்டும்.

  • இணைச்செயலாளர்கள் பதவிக்கு போட்டியிடும் இணை, துணை, உதவி இயக்குநர் உறுப்பினர்கள்,  சங்கத்தில் உறுப்பினராகி ஐந்து ஆண்டுகள் சந்தா செலுத்தியவர்களாக  இருக்கவேண்டும். அத்துடன் மூன்று நேரடி தமிழ்ப்படங்களில் பணிபுரிந்து, அந்த படங்கள் தணிக்கை செய்யப்பட்டு வெளிவந்திருக்க வேண்டும்.

  • செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடும் இயக்குநர் உறுப்பினர்கள்,  சங்கத்தில் உறுப்பினராகி ஐந்து ஆண்டுகள் சந்தா செலுத்தியவர்களாக இருக்கவேண்டும். அத்துடன் மூன்று நேரடி தமிழ்ப்படங்கள் இயக்கி, அந்த படங்கள் தணிக்கை செய்யப்பட்டு வெளிவந்திருக்க வேண்டும்.

  • செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடும் இணை, துணை, உதவி இயக்குநர் உறுப்பினர்கள்,  சங்கத்தில் உறுப்பினராகி ஐந்து ஆண்டுகள் சந்தா செலுத்தியவர்களாக  இருக்கவேண்டும். அத்துடன் மூன்று நேரடி தமிழ்ப்படங்களில் பணிபுரிந்து, அந்த படங்கள் தணிக்கை செய்யப்பட்டு வெளிவந்திருக்க வேண்டும்.

  • இவ்வாறாக நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை செயலாளர் அவர்கள் தெரிவித்தார்.

    அதைத் தொடர்ந்து பொருளாளர் வெ.சேகர் அவர்கள் திருத்த வேண்டியதற்கான காரணங்களை விளக்கினார்.

    இவ்விளக்கத்தையும் நமது சங்கத்தை சரியான வழியில் வழி நடத்திச் செல்லும் தலைவர் விக்ரமன் மற்றும் செயலாளர் ஆர்.கே.செல்வமணி அவர்களின் மேல் உள்ள நம்பிக்கையில் இத்தீர்மானங்களை அனைத்து உறுப்பினர்களாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. 

    நமது சங்கத்தின் செயற்பாடுகளைப் பார்த்து வியந்து முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு மற்ற 23 சங்கங்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கமும் செயற்படுகின்றன என்பதற்கு காரணம் நமது உறுப்பினர்கள்  கொடுக்கும்  ஆதரவேயாகும்.

    தயாரிப்பாளரான K.ராஜன் அவர்கள் உரையாற்றும்போது நமது இயக்குநர் சங்கத்தின் செயற்பாடுகளை முக்கியமாக சமீபத்தில் நமது உறுப்பினர்கள் 200 பேரின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகையாக 12 லட்சம் வழங்கப்பட்டதை செய்தித்தாள்களில் படித்து தெரிந்து கொண்டதாகவும், எல்லா சங்கத்திற்கும் முன் உதாரணம் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கமே என்று பாரட்டி பேசினார்.

    இவ்வாறாக இம்முக்கியமான பொதுக்குழுக்கூட்டம்-2015 உறுப்பினர்கள் முழு ஆதரவில் நல்லபடியாக முடிவடைந்தது. 

    Realted News

    ஆஸ்கர் பரிந்துரைகள் - 2015

    Read More

    இடா- விமர்சனம்

    Read More

    நார்வே தமிழ் திரைப்பட விழா-2015

    Read More

    Top Stories

    ”டாக்டர்” பட்டம்

    Read More

    சங்க செய்திகள்

    சினிமா செய்திகள்