Sanga Seithigal

மறைந்த கலாமிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.


மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களை இராமேஷ்வரத்தில் அடக்கம் செய்யும் தருணத்தில் அவரின் கனவை உறுதி எடுத்துக்கொள்ளும்  வகையில் அண்ணாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நமது தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பில் எற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் சங்கத்தலைவர் விக்ரமன், பொருளாளர் வெ.சேகர், துணைத்தலைவர் கே.எஸ்.ரவிக்குமார்,தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் தாணு, தென்னிந்திய தொழிளாலர்கள் சம்மேளனத் தலைவர் சிவா,நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி, தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் கஸ்தூரிராஜா, இயக்குநர் ராஜகுமாரன்,நடிகை தேவயானி,இயக்குநர் சந்தானபாரதி, இயக்குநர் மற்றும் நடிகர் ரமேஷ்கண்ணா, இயக்குநர் ’யார்’ கண்ணன் ஆகிய  பல முக்கிய இயக்குநர்கள், செயற்குழு உறுப்பினர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு அன்னாரின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியவாறு அனைவரும் கலாமின் மறைவு குறித்தும் இந்நாட்டிற்கும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு அவர் விதைத்துச் சென்ற பாதை குறித்தும் உரையாடினார்கள். முன்னதாக 2 நிமிடம் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.இயக்குநர் சரவண சுப்பைய்யா தொகுத்து வழங்கினார்.

தலைவர் விக்ரமன் உரையாற்றும் போது ’கடல்கள் சூழ்ந்த நமது தேசத்தை மக்களின் கண்ணீர் சூழ்ந்த தேசமாக்கிவிட்டுச் சென்றுள்ளார்.. கலாம் அவர்கள் மறையவில்லை.. அவர் நேசித்த பாரத தேசம் இருக்கும்வரை அவர் வாழ்ந்துகொண்டிருப்பார்’- என்பதை எடுத்துரைத்தார்.

இயக்குநர் யார் கண்ணன் பாவங்கள் மட்டுமே தினந்தோறும் கழிக்கப்படும் ராமேஷ்வரத்தில் தற்போது முதமுதலாக புண்னியம் விதைக்கப்படுகிறது என்று கலாம் பற்றி கவிதை வரிகளாக வாசித்தார்.

மேலும் கலாமின் கனவுகளையும் கருத்துக்களையும் இனிவரும் திரைப்படங்களின் மூலமாக மக்களின் மனதில் விதைக்க வேண்டும் என்று இயக்குநர் ரவிமரியா உரையாற்றினார். இவ்வாறாக மறைந்த ஐயா கலாம் அவர்களுக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி மற்றும் உறுதிமொழிக்கூட்டம்  நடந்தேறியது.

இப்படிக்கு

TANTIS

Realted News

பேசாத கதாபாத்திரங்களால் பேசப்பட வைக்கும் இயக்குநர்

Read More

நார்வே தமிழ் திரைப்பட விழா-2015

Read More

ஹாலிவுட்டில் ஹாரர் - ஒரு கண்ணோட்டம்

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்