Sanga Seithigal

மெல்லிசை மன்னன் காலமானார்..!


பிரபல திரைப்பட இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் சென்னை தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை காலமானார். உடல்நல குறைவால் ஒரு மாதமாக எம்.எஸ்.விஸ்வநாதன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி எம்.எஸ்.வி. உயிர் பிரிந்தது. விஸ்வநாதனுக்கு 4 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.

எம்.எஸ்.வி. வாழ்க்கை குறிப்பு

எம்.எஸ்.விஸ்வநாதன் 1928-ம் ஆண்டு ஜுன் 24-ம் கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்தார். 1945 முதல் 2015 வரை 60 ஆண்டு காலம் திரைத்துறையில் எம்.எஸ்.வி. கோலோச்சியவர் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 1200-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.  மேலும் கன்னடம், இந்தி படங்களிலும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. பணியாற்றியுள்ளார். 1953-ம் ஆண்டு வெளிவந்த ஜெனோவா படத்துக்கு முதன் முதலாக எம்.எஸ்.வி. இசையமைத்தார். ராமமூர்த்தியுடன் இணைந்து 700 படங்களுக்கு இசையமைத்துள்ளார். 500 படங்களுக்கு மேல் தனியாக எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்துள்ளார். மேலும் இளையராஜாவுடன் இணைந்து 3 படங்களிலும் இசையமைத்துள்ளார்.

எம்.எஸ்.வி. இசைக்கு அதிகப் பாடல்கள் எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் ஆவார். இவருக்கு மெல்லிசை மன்னர் பட்டம் நடிகாத் சிவாஜி கணேசனால் வழங்கப்பட்டது. இசையமைப்பாளர்கள் இளையராஜா, தேவா, கங்கை அமரன் யுவன்சங்கர் ராஜா, ஜி,வி. பிரகாஷ் ஆகியோரின் பாடல்களில் பாடியுள்ளார். மேலும் நீராரும் கடலுடுத்த என்ற தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மோகன ராகத்தில் எம்.எஸ்.வி. இசை கோர்த்துள்ளார்.

நடிகர் எம்.எஸ்.விஸ்வநாதன்

காதல் மன்னன், காதலா காதலா உள்பட 10 படங்களுக்கு மேல் எம்.எஸ்.வி. நடித்துள்ளார்.

இறுதி அஞ்சலி

எம்.எஸ்.விஸ்வநாதன் இறுதி அஞ்சலி பெசன்ட் நகர் மின் மயானத்தில் நாளை நடைபெறுகிறது.

Realted News

இயக்குநர் சிகரத்தின் டாப் 10

Read More

ஆரண்ய காண்டம் தியாகராஜன் குமாரராஜா

Read More

ருத்ரமாதேவி-திரைப்படம்

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்