Sanga Seithigal

நமது சங்கத் திரையரங்க திறப்பு விழா இனிதே முடிந்தது


நமது சங்கத்தின் திரையரங்கமான ’பாலச்சந்தர் திரையரங்கம்’ இன்று காலை (29.05.2015) 10:00 மணியளவில் இயக்குநர் இமயம் திரு பாரதிராஜா அவர்களால் ரிப்பன் வெட்டியும்தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் திரு.S.தாணு  அவர்களால் ப்ரொஜக்டர் முடுக்கிவிடப்பட்டும் திறந்து வைக்கப்பட்டது. மேலும் இவ்விழாவில் இயக்குநர் K.பாக்யராஜ் அவர்கள், இயக்குநர் S.A. சந்திரசேகர் அவர்கள்  மற்றும்  இயக்குநர் P.வாசு அவர்களும் கலந்து கொண்டனர்.

 முன்னதாக சங்கத்தின் உறுப்பினர்களான காளிங்கன் உருவாக்கிய குறும்படமான   மெரினா பாலைவனம் மற்றும் ராஜ்மோகன் உருவாக்கிய சிறுதுளி’ என்னும் குறும்படம் திரையிடப்பட்டது. இத்திறப்பு விழாவை வாழ்த்திப்பேசிய இயக்குநர் திரு.பாரதிராஜா அவர்கள் திரையிடப்பட்ட குறும்படங்களைப்பற்றியும் இன்றைய,நாளைய இயக்குநர்களின் தொழில்நுட்பத்திறன் மற்றும் தொலைநோக்குத்திறன் பற்றி பேசினார். தலைவர் விக்ரமன் அவர்கள் சிறப்புரையாற்றினார். செயலாளர் R.K.செல்வமணி அவர்கள் பேசும்போது திறந்து வைக்கப்பட்ட திரையரங்கின் பலன்கள் குறித்து பேசுகையில் இவ்வரங்கம் ப்ரிவ்யூ தியேட்டர், ஆடியோ ரிலீஸ் மற்றும் ஸ்டில் செஷன் ஆகியவற்றிற்கு பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நமது சங்க உறுப்பினர்களின் பயன்பாட்டிற்கு 50% சலுகை கட்டணத்திலும் மற்றவர்களுக்கு முழு கட்டணத்திலும் வழங்கப்பட இருக்கிறது. இவ்வரங்கம் நகரும் விளக்குகள் (MOVABLE LIGHTS) கொண்ட தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளதால் போட்டோசூட்டிற்கு சிறந்த அரங்கமாக விளங்கும் என்று எடுத்துரைத்துப்பேசினார்.

இவ்வரங்கம் அமைய நன்கொடை செய்த நடிகர் விஜய் அவர்கள் இயக்குநர்  A.L.விஜய்  மற்றும் இயக்குநர் லிங்குசாமி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும் இயக்குநர் திரு பாக்கியராஜ் அவர்கள் நமது இயக்குநர் சங்கத்தின் புதிய சினிமா இணையதளமான www.vellithirai.net/tamilthirai திறந்துவைக்கப்பட்டது.இவ் வலைதளத்தில் தமிழ் திரைப்படங்களின் படத்துவக்கம்,படப்பிடிப்பு மற்றும் பாடல் வெளியீடு மற்றும் திரைப்பட கலைஞர்களுடனான நேர்காணல் ஆகியவற்றின் காணொளி காட்சிகள் மற்றும் திரைப்பட முன்னோட்டம், புதிய திரைப்படங்களின் திரை விமர்சனம், தமிழ் சினிமா, இந்திய சினிமா மற்றும் உலக சினிமா பற்றிய கட்டுரைகள், சினிமா தொழில் நுட்பம் பற்றிய கட்டுரைகள் யாவும் உறுப்பினர்களின் அனைவரும் பயனடைவதற்காக தமிழிலேயே வழங்கப்படுகிறது. இவ்விதமாக திறப்புவிழா செவ்வனே நடந்தேறியது.

Realted News

சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா

Read More

ஷமிதாப்

Read More

வன்மம்

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்