Sanga Seithigal

உறுப்பினர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான அறிவிப்பு…!


நமது தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கக் கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் திரை அரங்கம்       ( ப்ரிவ்யூ தியேட்டர் ) வடிவமைக்கப்பட்டு வருகிறது.

        இவ்வரங்கம் வருகின்ற 29-05-2015 அன்று வெள்ளிக்கிழமை காலை    9-00 - 10.30 மணியளவில் திறந்து வைக்கப்பட இருக்கிறது. இவ்வரங்கம் ப்ரிவ்யூ தியேட்டர், ஆடியோ ரிலீஸ் மற்றும் ஸ்டில் செஷன் ஆகியவற்றிற்கு பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நமது சங்க உறுப்பினர்களின் பயன்பாட்டிற்கு சலுகை கட்டணத்திலும்  மற்றவர்களுக்கு முழு கட்டணத்திலும் வழங்கப்பட இருக்கிறது.

        மேலும் நமது தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின் வலைதளமான www.tantis.org சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதைத்தொடர்ந்து www.vellithirai.net/tamilthirai மற்றும் www.vellithirai.net/prabalam  என்ற இரு சினிமா வலைதளங்களும் 29-05-2015 அன்றே தலைவர் மற்றும் செயலாளர் மூலம் திறக்கப்பட இருக்கிறது. இவ் வலைதளத்தில் தமிழ் திரைப்படங்களின் படத்துவக்கம்,படப்பிடிப்பு மற்றும் பாடல் வெளியீடு மற்றும் திரைப்பட கலைஞர்களுடனான நேர்காணல் ஆகியவற்றின் காணொளி காட்சிகள் மற்றும் திரைப்பட முன்னோட்டம், புதிய திரைப்படங்களின் திரை விமர்சனம், தமிழ் சினிமா, இந்திய சினிமா மற்றும் உலக சினிமா பற்றிய கட்டுரைகள், சினிமா தொழில் நுட்பம் பற்றிய கட்டுரைகள் யாவும் உறுப்பினர்களின் அனைவரும் பயனடைவதற்காக தமிழிலேயே வழங்கப்படுகிறது.

         ஆதலால் உறுப்பினர்கள் அனைவரும் 29-05-2015 வெள்ளிகிழமையன்று காலை 9-00 - 10.30 மணியளவில் நடைபெறவிருக்கும் திறப்பு விழாவிற்கு வருகைத்தந்து விழாவைச் சிறப்புற செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

                                                                            இப்படிக்கு TANTIS 

Realted News

பேசாத கதாபாத்திரங்களால் பேசப்பட வைக்கும் இயக்குநர்

Read More

புத்தாண்டு தினத்தில் மேலும் ஓர் நற்செய்தி..!

Read More

ரஜினியின் அடுத்த படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித்

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்