Sanga Seithigal

ஜெயகாந்தன்-இலக்கிய பிதாமகன்


ஜெயகாந்தன்

சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இவருடைய படைப்பிலக்கியக் களம் சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் என பரந்து இருக்கின்றது.

வாழ்க்கைக் குறிப்பு.

ஜெயகாந்தன் 1934-ஆம் ஆண்டு கடலூரில், ஒரு வேளாண் குடும்பத்தில் பிறந்தார். பள்ளிப்படிப்பில் நாட்டம் இல்லாமையால், ஐந்தாம் வகுப்பிலேயே பள்ளி வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். உலகியல் அனுபவம் பெறவேண்டி, வீட்டை விட்டு வெளியேறி விழுப்புரம் சென்றார். அங்கு, அவர் மாமாவின் மேற்பார்வையில் வளர்ந்தார். அவர் ஜெயகாந்தனைப் பொதுவுடைமைக் கோட்பாடுகளுக்கும் பாரதியின் எழுத்துக்களுக்கும் அறிமுகப்படுத்தினார்.ஜெயகாந்தன் சில ஆண்டுகள் விழுப்புரத்தில் வாழ்ந்த பின் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். அங்கு பெரும்பாலான நேரத்தை சி.பி.ஐ ( C. P. I ) -யின் ஜனசக்தி அலுவலக அச்சகத்தில் பணிபுரிந்தும், ஜனசக்தி இதழ்கள் விற்றும் கழித்தார். 1949-ஆம் ஆண்டு சி. பி. ஐ மீதும் அதன் உறுப்பினர்கள் மீதும் தடை போடப் பட்டது. ஆதலால் சில திங்கள்கள், தஞ்சையில் காலணிகள் விற்கும் கடை ஒன்றில் பணிபுரிந்தார். இந்த எதிர்பாராத இடைவேளை அவர் வாழ்க்கையில் முதன்மையான காலகட்டமாக அமைந்தது. அவர் சிந்திக்கவும் எழுதவும் அப்பொழுது நேரம் கிடைத்தது. இக்கால கட்டத்தில், தமிழ்நாட்டில் முக்கிய அரசியல் மாற்றங்களும் நேர்ந்தன. தி.மு.க மற்றும் தி.க -வின் வளர்ச்சியால், சி.பி.ஐ மெதுவாக மறையத் துவங்கியது. உட்கட்சிப் பூசல்களினாலும், கட்சியுடன ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினாலும், ஜெயகாந்தன் சி.பி.ஐ-யிலிருந்து விலகினார். பின்னர் காமராசருடைய தீவிரத் தொண்டனாக மாறி, தமிழகக் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.அவரது இலக்கிய வாழ்க்கை 1950களில் தொடங்கியது - சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன் போன்ற ஏடுகளில் இவரது படைப்புகள் வெளியாயின. படைப்புகளுக்குப் புகழும் அங்கீகாரமும் கிடைத்தன. இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப் பெற்றார். ஜெயகாந்தன் சில ஆண்டுகள், தமிழ்த் திரையுலகிலும் வலம் வந்தார். இவரது நாவல்களான "உன்னைப் போல் ஒருவன்" மற்றும் "சில நேரங்களில் சில மனிதர்கள்" ஆகியவை படமாக்கப்பட்டன. இதில் "உன்னைப் போல் ஒருவன்" சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான குடியரசுத் தலைவர் விருதில் மூன்றாம் விருதைப் பெற்றது. மேலும், அவருக்கும் ஒரு நடிகைக்கும் ஏற்பட்ட உறவே "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" என்ற புதினமாக உருப் பெற்றது.

படைப்புகள்

தன் வரலாறு.

ஒர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் (அக்டோபர் 1974 )ஒர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள் (செப்டம்பர் 1980 )ஓர் இலக்கியவாதியின் பத்திரிகை அனுபவங்கள் (டிசம்பர் 2009)

வாழ்க்கை வரலாறு

வாழ்விக்க வந்த காந்தி 1973 (ரொமெயின் ரொலேண்ட்டின் ஃப்ரெஞ்சு மொழியில் வந்த காந்தியின் தன்வரலாற்றின் தமிழாக்கம் )ஒரு கதாசிரியனின் கதை (மே 1989 ( முன்ஷி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு)நாவல்கள் மற்றும் குறுநாவல்கள் [தொகு]வாழ்க்கை அழைக்கிறது (ஆகஸ்ட் 1957)கைவிலங்கு (ஜனவரி 1961)யாருக்காக அழுதான்? (பெப்ரவரி 1962)பிரம்ம உபதேசம் (மே 1963)பிரியாலயம் (ஆகஸ்ட் 1965)கருணையினால் அல்ல (நவம்பர் 1965 )பாரீசுக்குப் போ! (டிசம்பர் 1966)கோகிலா என்ன செய்துவிட்டாள்? (நவம்பர் 1967)சில நேரங்களில் சில மனிதர்கள் (ஜூன் 1970)ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (ஜனவரி 1971)ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் (ஏப்ரல் 1973)ஜெய ஜெய சங்கர... (செப்டம்பர் 1977)கங்கை எங்கே போகிறாள் (டிசம்பர் 1978)ஒரு குடும்பத்தில் நடக்கிறது... (ஜனவரி 1979)பாவம், இவள் ஒரு பாப்பாத்தி ! (மார்ச் 1979)எங்கெங்கு காணினும்... (மே 1979)ஊருக்கு நூறு பேர் (ஜூன் 1979)கரிக்கோடுகள் (ஜூலை 1979)மூங்கில் காட்டினுள்ளே (செப்டம்பர் 1979)ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும் (டிசம்பர் 1979)ஒவ்வொரு கூரைக்கும் கீழே... (ஜனவரி 1980)பாட்டிமார்களும் பேத்திமார்களும் (ஏப்ரல் 1980)அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள் (ஆகஸ்ட் 1980)இந்த நேரத்தில் இவள்... (1980)காத்திருக்கா ஒருத்தி (செப்டம்பர் 1980)காரு (ஏப்ரல் 1981)ஆயுத பூசை (மார்ச் 1982)சுந்தர காண்டம் (செப்டம்பர் 1982)ஈஸ்வர அல்லா தேரே நாம் (ஜனவரி 1983)ஓ, அமெரிக்கா! (பெப்ரவரி 1983)இல்லாதவர்கள் (பெப்ரவரி 1983)இதய ராணிகளும் ஸ்பெடு ராஜாக்களும் (ஜூலை 1983)காற்று வெளியினிலே... (ஏப்ரல் 1984)கழுத்தில் விழுந்த மாலை (செப்டம்பர் 1984)அந்த அக்காவினைத்தேடி... (அக்டோபர் 1985)இன்னும் ஒரு பெண்ணின் கதை (ஜூலை 1986)ரிஷிமூலம் (செப்டம்பர் 1965)சினிமாவுக்குப் போன சித்தாளு (செப்டம்பர் 1972)உன்னைப் போல் ஒருவன்ஹர ஹர சங்கர (2005)கண்ணன் (2011)சிறுகதைகள் தொகுப்பு [தொகு]ஒரு பிடி சோறு (செப்டம்பர் 1958)இனிப்பும் கரிப்பும் (ஆகஸ்ட் 1960)தேவன் வருவாரா (1961)மாலை மயக்கம் (ஜனவரி 1962)யுகசந்தி (அக்டோபர் 1963)உண்மை சுடும் (செப்டம்பர் 1964)புதிய வார்ப்புகள் (ஏப்ரல் 1965)சுயதரிசனம் (ஏப்ரல் 1967)இறந்த காலங்கள் (பெப்ரவரி 1969)குருபீடம் (அக்டோபர் 1971)சக்கரம் நிற்பதில்லை (பெப்ரவரி 1975)புகை நடுவினிலே... (டிசம்பர் 1990)சுமைதாங்கிபொம்மை

ஜெயகாந்தனின் சிறுகதைப்பட்டியல்(கால முறைப்படி)

வ.எண்கதையின் பெயர்வெளியான காலம்இதழின்பெயர் தொகுப்பின் பெயர்வெளியீட்டாளர் பெயர்

1ஆணும் பெண்னும்-/-/1953-ஆணும் பெண்னும்எட்டு பிரசுரம், 19532பட்டணத்து வீதியிலே-/-/1953-,,,,3பேசும் புழுக்கள்15/9/1953பிரசண்ட விகடன்எத்தொகுப்பிலும் இடம் பெறவில்லை-4காலம் தோற்றது-/12/1953காவேரி,,,,5சாந்தி பூமி--உதயம்விஜயா பிரசுரம், 19546சுமை பேதம்--உதயம்,,7கண்ணன் பிறந்தான்--உதயம்,,8உதயம்--,,,,9பிழைப்பு--உதயம்-10மீனாட்சி ராஜ்யம்--,,,,11காந்தி ராஜ்யம்--,,,,12சொக்குப்பொடி16/05/1954சமரன்எத்தொகுப்பிலும் இடம் பெறவில்லை13சட்டம் வந்த நள்ளிரவில்23/05/1954சமரன்உதயம்விஜயா பிரசுரம், 195414மரணவாயில்30/05/1954சமரன்,,,,15சாந்தி சாகரம்13/06/1954சமரன்,,,,16எச்சரிக்கை20,27/06/1954சமரன்,,,,17தத்துவச் சொறி04/07/1954சமரன்எத்தொகுப்பிலும் இடம் பெறவில்லை18இவர்களும் இருக்கிறார்கள்11,18/07/1954சமரன்உதயம்,,19இலட்சியச் சிலுவை-/-/1954சமரன்,,,,20யாசனம்-/05/1955சரஸ்வதி,,,,21தேரைப்பழி-/06/1955சரஸ்வதி,,,,22ஆலமரம்-----மாலை மயக்கம்மீனாட்சி புத்தக நிலையம் 196223பித்துக்குளி-/07/1955சரஸ்வதிஉண்மை சுடும்,, 196424பேதைப்பருவம்-/08/1955சரஸ்வதிதேவன் வருவாரா,, 196125தனிமனிதன்-/-/1955-ஒரு பிடி சோறு,, 195826பொறுக்கி-/-/1955-,,,, 195827தமிழச்சி-/-/1955-,,,, 195828சலிப்பு-/03/1956சாந்திஉண்மை சுடும்,, 196429வேலைகொடுத்தவன்-/08/1956சரஸ்வதிஒரு பிடி சோறு,, 195830பூ வாங்கலியோ பூ-/09/1956,,,,,, 195831தீபம்-/11/1956,,எத்தொகுப்பிலும் இடம் பெறவில்லை32தாம்பத்தியம்-/2/1957சரஸ்வதிஇனிப்பும் கரிப்பும்மீனாட்சி புத்தக நிலையம் 196033திரஸ்காரம்-/3/1957,,புதிய வார்ப்புகள்,, 196534ரிக் ஷாகாரன் பாஷை-/4/1957,,ஒரு பிடி சோறு,, 195835பெளருஷம்-/5/1957,,சுமை தாங்கி,, 196236சினம் எனும் தீ6/6/1957,,எத்தொகுப்பிலும் இடம் பெறவில்லை37பால் பேதம்-/8/1957,,இனிப்பும் கரிப்பும்மீனாட்சி புத்தக நிலையம் 195838எது, எப்போது-/09/1957,,,,,,39ஒருபிடி சோறு-/10/1957,,,,,,40ராசா வந்துட்டாரு-/11/1957சரஸ்வதிஒரு பிடி சோறு,,41ஒரு பிரமுகர்-/12/1957,,இனிப்பும் கரிப்பும்,, 196042முச்சந்தி-/01/1958,,தேவன் வருவாரா,, 196143தாலாட்டு-/03/1958,,இனிப்பும் கரிப்பும்,, 196144டிரெடில்-/04/1958,,ஒரு பிடி சோறுமீனாட்சி புத்தக நிலையம் 195845சாளரம்-/06/1958,,புதிய வார்ப்புகள்,, 196546கண்ணம்மா-/08/1958,,எத்தொகுப்பிலும் இடம் பெறவில்லை47நந்தவனத்தில் ஒரு ஆண்டி-/09/1958,,இனிப்பும் கரிப்பும்,, 196048பிணக்கு-/10/1958,,இனிப்பும் கரிப்பும்,, 196049போர்வை-/12/1958,,புதிய வார்ப்புகள்,, 196550யந்திரம்-/12/1958தாமரைதேவன் வருவாரா,, 196151பட்டணம் சிரிக்கிறது-/-/1958-ஒருபிடி சோறு,, 195852அபாயம்-/-/1959-புதிய வார்ப்புகள்,, 196553ஓவர்டைம்-/02/1959ஆனந்த விகடன்இனிப்பும் கரிப்பும்,, 196054பற்றுகோல்-/03/1959சரஸ்வதி,,,,55தர்க்கம்-/04/1959சரஸ்வதி,,,,56செக்சன் நம்பர் 54-/07/1959கல்கிசுமைதாங்கிமீனாட்சி புத்தக நிலையம், 196257புகைச்சல்-/07/1959ஆனந்த விகடன்இனிப்பும் கரிப்பும்,, 196058இனிப்பும் கரிப்பும்-/07/1959கங்கைஇனிப்பும் கரிப்பும்,, 196059நிந்தாஸ்துதி-/09/1959கல்கிஇனிப்பும் கரிப்பும்,, 196060போன வருசம் பொங்கலப்போ-/10/1959கல்கிசுமை தாங்கி,, 196261சர்வர் சீனு-/10/1959கல்கிசுமை தாங்கி,, 196262ராஜா-/10/1959கல்கி,,,, 196263கேவலம் ஓரு நாய்-/10/1959கல்கி,,,, 196264உண்ணாவிரதம்-/11/1959-மாலை மயக்கம்,, 196265துறவு-/-/1959சரஸ்வதிதேவன் வருவாரா,, 196266நீ இன்னா சார் சொல்றே-/-/1959-மாலை மயக்கம்,, 196167இரண்டு குழந்தைகள்-/-/1959புதுமைதேவன் வருவாராமீனாட்சி புத்தக நிலையம், 196268குறைப்பிறவி-/-/1959ஆனந்த விகடன்தேவன் வருவாரா,, 196169தேவன் வருவாரா-/-/1959அமுத சுரபிதேவன் வருவாரா,,70அன்புக்கு நன்றி14/01/1960தாமரைஉண்மை சுடும்,, 196471சுய ரூபம்-/01/1960ஆனந்த விகடன்மாலை மயக்கம்,, 196272வெளிச்சம்07/04/1960தாமரைசுமைதாங்கி,, 196273துர்க்கை27/03/1960ஆனந்த விகடன்,,,,74சிலுவை-/05/1960தாமரை,,,,75இதோ, ஒரு காதல் கதை08/05/1960ஆனந்த விகடன்மாலை மயக்கம்,, 196276சீட்டாட்டம்17/07/1960,,,,,,77புதிய கதை-/-/1960தாமரைபுதிய வார்ப்புகள்,, 196578வாய்ச்சொற்கள்14/08/1960ஆனந்த விகடன்மாலை மயக்கம்,, 196279இது என்ன பெரிய விஷயம்11/09/1960,,,,,,80பொம்மை30/10/1960ஆனந்த விகடன்தேவன் வருவாரா,, 196181தொத்தோ-/-/1960ஆனந்த விகடன் (தீபாவளி மலர்)தேவன் வருவாராமீனாட்சி புத்தக நிலையம் , 196182உடன்கட்டை11/12/1960ஆனந்த விகடன்யுகசந்தி,, 196383பத்தினிப் பரம்பரை-/12/1960தாமரைஉண்மை சுடும்,, 196484நிறங்கள்-/-/1960அமுத சுரபிதேவன் வருவாரா,, 196185உறங்குவது போலும்-/-/1960-மாலை மயக்கம்,, 196286மே--20-/-/1960-சுமை தாங்கி,, 196287மூக்கோணம்09/01/1961ஆனந்த விகடன்எத்தொகுப்பிலும் இடம் பெறவில்லை88மூங்கில்26/05/1961,,யுகசந்திமீனாட்சி புத்தக நிலையம் , 196389கற்பு நிலை21/05/1961,,,,,,90நான் இருக்கிறேன்30/07/1961,,,,,,91என்னை நம்பாதே-/-/1961ஆனந்த விகடன் (தீபாவளி மலர்) உண்மை சுடும்,, 196492தர்க்கத்திற்கு அப்பால்5/11/1961ஆனந்த விகடன்யுகசந்திமீனாட்சி புத்தக நிலையம் , 196393லவ் பண்ணூங்கோ ஸார்17/12/1961,,,,,,94சோற்றுச்சுமை-/-/1961கல்கிதேவன் வருவாரா,, 196195மாலை மயக்கம்-/-/1962-மாலை மயக்கம்,, 196296சுமைதாங்கி-/-/1962-சுமைதாங்கி,, 196297கருங்காலி3/2/1962ஆனந்த விகடன்யுகசந்தி,, 196398அடல்ட்ஸ் ஒன்லி-/4/1962,,,,,,99மெளனம் ஒரு பாஷை-/5/1962,,,,,,100ஒரெ நண்பன்10/06/1962,,,,,,101பிம்பம்-/-07/1962கல்கிஉண்மை சுடும்,, 1964102முன்நிலவும் பின்பனியும்26/08/1962ஆனந்த விகடன்யுகசந்தி,, 1963103இல்லாதது எது07/10/1962,,,,,,104பூ உதிரும்16/12/1962ஆனந்த விகடன்யுகசந்திமீனாட்சி புத்தக நிலையம் , 1963105கிழக்கும் மேற்கும்21/07/1963,,,,,,106தரக்குறைவு16/06/1963,,,,,,107யுகசந்தி21/07/1963,,,,,,108உண்மை சுடும்22/09/1963,,உண்மை சுடும்,, 1964109ஆளுகை00/00/1963ஆனந்த விகடன்(தீபாவளி மலர்),,,,110பொய் வெல்லும்10/11/1963ஆனந்த விகடன்,,,,111சாத்தானும் வேதம் ஓதட்டும்29/12/1963,,,,,,112இருளைத் தேடி08/03/1964,,,,,,113ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின்12/04/1964,,,,,,114எத்தனை கோணம் எத்தனை பார்வை21/06/1964,,புதிய வார்ப்புகள் ,,115ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில்28/08/1964,,புதிய வார்ப்புகள் மீனாட்சி புத்தக நிலையம் , 1965116விளக்கு எரிகிறது09/11/1964,,,,,,117புதிய வார்ப்புகள்14/03/1965,,,,,,118அந்தக் கோழைகள்16/05/1965,,சுயதரிசனம்,, 1967119சட்டை03/10/1965,,,,,,120சுயதரிசனம்00/00/1965,,,,,,121முற்றுகை00/00/1965,,,,,,122இருளில் ஒரு துணை14/08/1966,,,,,,123லட்சாதிபதிகள்0/0/1966ஆனந்த விகடன் (தீபாவளி மலர்),,,,124அக்கினிப் பிரவேசம்20/11/1968ஆனந்த விகடன்,,,, 1969125பாவம் பக்தர்தானே!03/05/1967,,இறந்த காலங்கள்,,126நான் ஜன்னலருகே உட்கார்ந்து இருக்கிறேன்17/03/1968,,,,,,127அக்ரஹாரத்துப் பூனை09/11/1968ஆனந்த விகடன் (தீபாவளி மலர்) இறந்த காலங்கள்மீனாட்சி புத்தக நிலையம் , 1969128நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ19/01/1969ஆனந்த விகடன்,,,,129ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது13/04/1969,,குரு பீடம்,, 1971130தவறுகள் குற்றங்களல்ல05/10/1969,,,,,,131டீக்கடை சாமியாரும் டிராக்டர் சாமியாரும்07/11/1969,,,,,,132கண்ணாமூச்சி0/0/1969தினமணிக் கதிர் (திபாவளி மலர்)இறந்த காலங்கள்,, 1969133அந்த உயிரின் மரணம்0/0/1969,,குரு பீடம்,, 1971134அந்தரங்கம் புனிதமானது0/0/1969ஆனந்த விகடன்இறந்த காலங்கள்,, 1969135இறந்த காலங்கள்0/0/1969,,,,,,136விதியும் விபத்தும்0/0/1969,,குரு பீடம்மீனாட்சி புத்தக நிலையம், 1971137எங்கோ, யாரோ, யாருக்காகவோ2,3/04/1970ஞானரதம்,,,,138குரு பீடம்0/0/1970,,,,,,139நிக்கி0/0/1970,,,,,,140புதுச் செருப்பு கடிக்கும்02/05/1970ஆனந்த விகடன்,,,,141சீசர்16/09/1971,,சக்கரம் நிற்பதில்லை,, 1975142அரைகுறைகள்0/0/1971ஆனந்த விகடன் (தீபாவளி மலர்),,,,143சக்கரம் நிற்பதில்லை15/11/1974தினமணி கதிர்,,,,144இந்த இடத்திலிருந்து0/0/1975ஆனந்த விகடன்,,,,145குருக்கள் ஆத்து பையன்0/0/1975,,தினமணி கதிர்,,

கட்டுரை.

பாரதி பாடம்இமயத்துக்கு அப்பால்தொகுப்பு [தொகு]ஜெயகாந்தன் பேட்டிகள் (கபிலன் பதிப்பகம்)திரைப்படமாக்கப்பட்ட இவருடைய கதைகள் [தொகு]சில நேரங்களில் சில மனிதர்கள் (இயக்குநர் : பீம்சிங்)ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (இயக்குநர் : பீம்சிங்)ஊருக்கு நூறு பேர் (இயக்குநர் : லெனின்)உன்னைப் போல் ஒருவன்யாருக்காக அழுதான்புதுச் செருப்புஜெயகாந்தன் இயக்கிய திரைப்படம் [தொகு]உன்னைப் போல் ஒருவன்யாருக்காக அழுதான் [1]புதுச்செருப்பு கடிக்கும்

சிந்தனைச் சிதறல்கள்.

"முதலில் எழுதுகிறவன் என்ற முறையில், எதை எழுதுவது என்று தீர்மானிப்பவன் நானே""ஒரு பாத்திரத்தின் மீது அர்த்தமில்லாத வெறுப்பு அல்லது அசட்டுத்தனமான அனுதாபம் கொள்ளுகின்ற வாசகர்கள், இலக்கியத்தின் மூலம் வாழ்க்கையினைப் புரிந்து கொள்ள மறந்துவிடுகிறார்கள்""மகாபாரதம் என்பது ஒருத்திக்கு ஐந்து கணவர்கள் என்கிற ஒரு விஷயத்தை மட்டும் எனக்குச் சொல்லவில்லை. மேலும் அது மகாபாரதம் என்ற கலாசாரப் பொக்கிஷத்தில் ஒரு விஷயமாகவோ, சிபாரிசாகவோ எனக்குப் படவேயில்லை. அந்த விஷயத்தைப் புரிந்துகொள்கிற பக்குவம், திரௌபதி அம்மன் கோவிலின் முன்னால் சாமியாடுகிற ஒரு பாமரனுக்கு இருக்கிற அளவுக்குக் கூட நமது பகுத்தறிவுச் சிங்கங்களுக்கு இல்லாமல் போனது நமது துரதிர்ஷ்டமே""அரசாங்க அலுவலகங்களில் மகான்களின் மரணத்துக்காக கொடிகள் தாழப்பறக்கட்டும். அவர்கள் நினைவாகப் பிரார்த்தனைகள் நடக்கட்டும். ஆனால், எது குறித்தும் எல்லாரும் கும்பல் கூடி அழவேண்டா. ரேடியோக்காரர்கள் தங்களது பொய்த்துயரத்தை காற்றில் கலப்படம் செய்யாதிருக்கட்டும்""நான் பிழைப்புக்காக என்னென்ன செய்திருக்கிறேன் என்றொரு நினைவுப் பட்டியல் போட்டால்... மளிகைக் கடைப் பையன், ஒரு டாக்டரின் பை தூக்கும் உத்தியோகம், மாவு மெஷின் வேலை, கம்பாசிடர், டிரெடில்மேன், மதுரை சென்டிரல் சினிமாவில் வேலைக்காரி சினிமா பாட்டுப் புத்தகம் விற்றது, கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸில் இருந்து பத்திரிக்கைகள், புத்தகங்கள் விற்றது, ஃபவுண்ட்ரியில் எஞ்சினுக்கு கரி கொட்டுவது, சோப்பு ஃபாக்டரியில், இங்க் ஃபாக்டரியில் கைவண்டி இழுத்தது....ஃபுரூஃப் ரீடர், பத்திரிக்கை உதவி ஆசிரியர்... "

ஜெயகாந்தனுக்கு ரஷ்ய விருது

விருதுகள்.

சாகித்திய அகாதமி விருது

2002-ம் ஆண்டுக்கான ஞான பீட விருது 2009-ம் ஆண்டின் இலக்கியத்துறைக்கான பத்ம பூஷன் விருது

ரஷ்ய விருது

மற்ற எழுத்தாளர்களின் கருத்துக்கள்.

"ஜெயகாந்தன், எத்தகைய பாத்திரங்களைப் படைத்தாலும் அந்தப் பாத்திரங்களின் சிறந்த அம்சங்களை குறிப்பிடத் தவறுவதில்லை. துவேஷத்தைப் பரப்புவது, அவருடைய இயல்புக்கு சற்றும் ஒவ்வாதது. அவர் அரசியலில் தொடர்ந்து பங்கி பெறாமல் போனதற்கு இதுகூட காரணமாக இருந்திருக்கலாம்" - அசோகமித்திரன்

"மனதைக் கிள்ளி மோகலாகிரியைத் தூவும் சொற்கள் பல தமிழில் உண்டு. ‘ஜெயகாந்தன்’ என்ற பெயரே அப்படிப்பட்டதுதான். இந்தப் பெயர் அறிமுகமாகி என்னளவில் நாற்பத்தைந்து வருடங்களாவது இருக்கும். ஆனாலும், இந்தப் பெயர் தரும் கவர்ச்சியும், அதன் மீதான பிரேமையும் அப்படியே இருக்கின்றன. யதார்த்தத்தின் மற்றொரு பெயர் ‘தத்ரூபம்’ என்றால், ஜெயகாந்தனின் கதைகள் எல்லாம் அவ்வளவு தத்ரூபமாக இருந்தன. ஜெயகாந்தன் என்ற மேதாவிலாசமிக்க படைப்பாளியின் ஊற்றுக்கண் எங்கே இருந்து புறப்படுகிறது என்று அனுமானிப்பது கடினம். நதிமூலம், ரிஷிமூலம் தேடுகிற மாதிரியான சமாச்சாரம்தான் இது. என்றாலும், ஜெயகாந்தனே தன்னைப் புதுமைப்பித்தனின் வாரிசு என்பதுபோல் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டது ஞாபகத்துக்கு வருகிறது. இதுதான் நிஜமும். " - வண்ணநிலவன்

"பாரதியார் வாழ்ந்த காலங்களில் கௌரவிக்கப்பட்டதில்லை. லியோ டால்ஸ்டாய் நோபல் பெறாதவர். போர்ஹே நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டவர். விருதும் கௌரவமும் சரியான நேரத்தில், சரியான நபருக்கு, சரியான அமைப்புகளால் வழங்கப்படுவது ஒரு போதும் நிகழ்வதில்லை. அதற்காக விருதுகளால் மட்டுமே எழுத்தாளர்கள் கௌரவம் அடைவதுமில்லை. ஜெயகாந்தன் எல்லா விருதுகளுக்கும் தகுதியானவர். எல்லா விருதுகளைத் தாண்டியும் மிகுந்த ஆளுமையும் உயர்வும், தனித்துவமும் கொண்டவர்." - எஸ். ராமகிருஷ்ணன்

" ஜெயகாந்தன் ஒரு நீராவி என்ஜின் போல ஆற்றலும் வேகமும் கொண்ட படைப்பாளி என்பதில் சற்றும் சந்தேகமில்லை. ஆனால் நீராவி என்ஜின்கள் கடந்த காலத்தின் அடையாளம்.-மாலன்

Realted News

விக்ரம்,சூர்யா,கார்த்தி இணையும் ’பிரதர்ஸ்’..!

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்