Cinema Seithigal

எனக்குள் ஒருவன்- திரை விமர்சனம்

இன்செப்சன் படத்தின் இன்ஸ்பிரேசனில் கன்னடத்தில் உருவான படம், லூசியா. க்ரவுட் ஃபண்டிங் முறையில் வெளியாகி மெகா ஹிட் ஆனது. லூசியா கதையைத் தயார்செய்து அதன் திரைக்கதையோடு அலைந்தவருக்கு, அனைத்து இடங்களிலும் நிராகரிப்பே மிஞ்சியது.  கதையைக் கேட்ட அத்தனை ஹீரோக்களும் தயாரிப்பாளர்களும், இதை யாருங்க பார்க்கப் போறா?’ என்று கதவை சாத்த, நொந்துபோன பவண், லூசியாவின் ஒன்-லைன் கதையை தன்  ப்ளாக்கில் எழுதிவிட்டுப் புலம்பியிருக் கிறார். அதைப் படித்து பிடித்துப் போன நெட்டிசன்’கள் பவண்குமாரின் வங்கிக்கணக்கில் சிறிதும் பெரிதுமாக பணத்தைக் கொட்ட, 27 நாட்களில் 51 லட்சம் ரூபாய் சேர்ந்துவிட்டது. அப்படிப் பணம் அளித்த 110 தயாரிப் பாளர்களின் உதவியுடனே லூசியா’வை இயக்கியிருக்கிறார் பவண். அந்தப் படத்தினை தமிழில் ‘எனக்குள் ஒருவனாக’ ரீமேக் செய்திருக்கிறார்கள். சி.வி.குமாரின் தயாரிப்பில் சித்தார்த் நடிப்பில் உருவான படம்.

நிஜ வாழ்வில் சலிப்புற்ற ஹீரோவுக்கு, கனவில் நினைத்த வாழ்க்கையை வாழ லூசியா எனும் மாத்திரை மூலம் ஒரு வாய்ப்பு வருகிறது. அது ஹீரோவின் வாழ்க்கையை

எப்படி திருப்பிப் போடுகிறது என்பதே கதை.

திரைக்கதை தான் படத்தின் மிகப்பெரிய பலம்.

கோமாவில் கிடக்கும் சித்தார்த். அதற்கான காரணத்தை விசாரிக்கும் போலீஸ்.

தியேட்டரில் டார்ச் அடித்து, ஆட்களை உட்கார வைக்கும் ஏழை சித்தார்த்தின் கதை, கூடவே ஹீரோயின் தீபா சன்னதியுடன் ஒரு அழகான காதல்.

டாப் சினிமா ஸ்டார் சித்தார்த்தின் கதை..கூடவே மாடல்(தீபா சன்னதி) மேல் காதல் கொள்ளும் கதை.

மூன்று கதையையும் கலந்து கட்டி அடிக்கிறார்கள். மூன்று கதையும் ஒன்று சேரும்புள்ளியில் ‘அட’ என்று நம்மை அசர வைக்கிறார்கள். தமிழில் பொதுவாக மறுபடியும்

மறுபடியும் பார்த்துப் புரிந்துகொள்ள வைக்கும் ஸ்டைலில் திரைக்கதைகள் வருவதில்லை. அந்தவகையில், இதுவொரு முக்கியமான படம்.

ஒரு கதையில் நரேனுக்கு விசுவாசமாக சித்தார்த் இருக்க, இன்னொரு கதையில் சித்தார்த்துக்கு விசுவாசமாக வருகிறார். இப்படி இரண்டு கதையிலும் பல தலைகீழ்

மாற்றங்கள், நுணுக்கமான சித்தரிப்புகளுடன் தரமான படமாக வந்திருக்கிறது.

ஒரிஜினல் கன்னட ஹீரோவைவிட, இரண்டு கேரக்டருக்கு இடையே அதிக வித்தியாசத்தைக் காட்டியிருக்கிறார். உடல்மொழி, பேசும் விதம் என எல்லாவற்றிலும் நல்ல உழைப்பு. ஏழை அப்பாவியாக காதலில் தயக்கம் காட்டுவதும், சினிமா ஸ்டாராக அதிகாரம் காட்டுவதுமாக கலக்கல் நடிப்பு. சித்தார்த்தின் கரியரில் இதுவொரு முக்கியமான படமாக இருக்கும். 

Realted News

எனக்குள் ஒருவன்- திரை விமர்சனம்

Read More

ஜெயகாந்தன்-இலக்கிய பிதாமகன்

Read More

பாராட்டு விழா..!

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்