Cinema Seithigal

இந்திரஜித் - விமர்சனம்

சென்னை: அட்வெஞ்சர் படங்களுக்கு உலகெங்குமே ரசிகர்கள் அதிகம். ஏதாவதுஒரு பொக்கிஷத்தை தேடிச்செல்லும் கதாநாயகன் பல்வேறு சவால்களைசந்தித்து தனது குறிக்கோளை நிறைவேற்றுவது படம் பார்ப்பவர்களைமெய்சிலிர்க்க வைக்கும். அதனால்தான் இதை மையமாகக் கொண்ட இந்தியானாஜோன்ஸ் போன்ற ஹாலிவுட் படங்கள் வரும்போது கூட இங்கே அரங்கங்கள்நிறைகின்றன. 

அதேபோன்ற ஒரு கதையுடன் கலாபிரபு இயக்கத்தில், கவுதம்கார்த்திக் நடிப்பில் கலைப்புலி எஸ்.தாணுவின் பிரம்மாண்ட தயாரிப்பில்வெளியாகி இருக்கிறது இந்திரஜித். 

விமர்சனத்துக்கு செல்லும் முன் தாணுவிற்கு ஒரு ஸ்பெஷல் பொக்கேகொடுக்கலாம். படம் முழுக்க பிரம்மாண்டம் தெரிகிறது. எல்லாக் காட்சியிலுமேபிரம்மாண்டம் இருப்பதால் பார்ப்பவர்களுக்கு முதலில் ஆச்சர்யத்தைஏற்படுத்துகிறான் இந்திரஜித்.கவுதம் கார்த்திக் ஒரு துறுதுறு ஜென் இசட் பையன். அவரை தன்னுடையஆராய்ச்சியில் உதவியாளராக சேர்த்துக்கொள்கிறார் சச்சின் கடேகர். 

ஆராய்ச்சிஎதை நோக்கி என்றால் சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பூமியை அடைந்தஒரு விண்கல்லுக்கு 300 ஆண்டுகள் வரை நோய் நொடியின்றி ஆயுளைத்தரக்கூடிய வல்லமை இருக்கிறது. அந்தக் கல்லை நோக்கி தேடுதல் வேட்டைக்குபுறப்படுகிறார்கள். அதை அபகரிக்க சுதான்சு பாண்டேயும் வருகிறார். கவுதம்கார்த்திக் தன் உயிரை பணயம் வைத்து எடுக்கும் அந்த விண்கல் யாரை சென்றுசேர்கிறது என்பதுதான் கதை.

இவர்களில் யார் வில்லன் என்பதற்குக்ளைமாக்ஸில் ஒரு ட்விஸ்ட் உண்டு.துறுதுறு விளையாட்டு பையனாக கவுதம் கார்த்திக். அவரது அப்பா கார்த்திக்கைஆரம்ப காலத்தில் பார்த்ததை நினைவுபடுத்துகிறார். 

சுதான்சு பாண்டேயும் சச்சின் கடேகரும் தங்களுக்கு பணியை சரியாகசெய்திருக்கிறார்கள். டப்பிங் கொடுத்திருப்பவர்கள்தான் குரலுக்கு பொருத்தமேஇல்லாமல் வட இந்திய பாணியில் பேசிக்கொல்கிறார்கள்.எம்.எஸ்.பாஸ்கர் சில காட்சிகளே வந்தாலும் ரிலாக்ஸ் தருகிறார். 

படத்தின் இன்னொரு ஹீரோ கேமரா. ராசாமதிக்கு இது ஒரு விசிட்டிங் கார்டு.விஷுவல் தெறிக்கிறது.இசை கேபி.  கதையோடுஒன்ற இசை ஒத்துழைக்கிறது. 

  இயக்குநர் கலாபிரபு  தமிழில் இப்படி ஒரு முயற்சி எடுத்ததற்காக பாராட்டலாம்.குழந்தைகளுக்கும் ஃபேன்டசி விரும்பும் பெரியவர்களுக்கும் பிடிக்கும்.

Realted News

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா...

Read More

சிகப்பு ரோஜாக்கள் 2

Read More

எனக்குள் ஒருவன்- திரை விமர்சனம்

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்