Cinema Seithigal

என் ஆளோட செருப்ப காணோம் - விமர்சனம்

இப்போதெல்லாம் சிறு பட்ஜெட் படங்கள் நல்ல கதைகளை தாங்கி சில விசயங்களால் ஈர்க்கப்படுகிறது. அதில்

ஒன்றாக இப்போது வந்திருக்கும் என் ஆளோட செருப்ப காணோம் படம்வந்துள்ளது.

பல படங்கள் வந்தாலும் இப்படி ஒரு டைட்டில் விட்டபோதே இது எப்படி இருக்குமோ என்ற திரும்பி பார்க்க வைத்த இப்படக்கதையில் செருப்பின்பங்கு என பார்க்கலாம்.

ஆனந்தியும் தமிழும் கல்லூரி மாணவர்கள். ஆனந்தியை ரொம்ப நாளாக ஒரு தலையாகக் காதலித்து பின் தொடர்ந்து கொண்டிருப்பவர் யோகி பாபு. அவருக்கு நண்பனாக கூடவே போவதுதான் தமிழுக்கு வேலை. ஒரு நாள் ஆனந்தியைப்பார்த்ததும் தமிழும் அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார். அவரும்ஆனந்தியை பின்தொடர ஆரம்பிக்கிறார். ஒரு நாள் பேருந்தில்ஏறும் ஆனந்தியின் ஒரு செருப்பு தவறி விழுந்து விடுகிறது.

மற்றொரு செருப்பை ஆனந்தி பேருந்திலேயே விட்டுவிட்டுப்போகிறாள். இதை தமிழ் பார்க்கிறான். வெளிநாட்டில் வேலைப்பார்க்கும் ஆனந்தியின் அப்பா ஜெயப்பிரகாஷை தீவிரவாதிகள்கடத்தி பிணைக் கைதியாக வைத்துக் கொண்டு தங்கள்தேவைகளை நிறைவேற்றுமாறு மிரட்டுகிறார்கள். இதில் மனம்கலங்கும் ஆனந்தியும் அம்மா ரேகாவும், குறி கேட்கப்போகிறார்கள். குறி சொல்பவர் தமிழின் அம்மா. ஆனந்தியின்அப்பா கடத்தப்பட்ட நாளில் நடந்த விஷயங்களை குறிசொல்பவர் கேட்க, அன்று தன் செருப்பு காணாமல்

போனதையும் சொல்கிறார் ஆனந்தி. அந்த செருப்பை மீண்டும்காணும்போது ஜெயப்பிரகாஷ் வந்துவிடுவார் என அஜித்ஆட்டோ கண்ணாடியைத் திருப்பிய லாஜிக்குடன் சொல்கிறார்

குறி சொல்பவர். இதை மறைந்திருந்து கேட்டுவிடுகிறார்நாயகன் தமிழ். மீதி என்ன நடந்திருக்கும் என உங்களால்

யூகிக்க முடிகிறதல்லவா! ஒரு செருப்பை வைத்தே முழுப்படத்தையும் நகர்த்துவது சாமானிய விஷயமல்ல. அதுவும்பார்க்கும்படி நகர்த்துவதற்கு தனித் திறமை வேண்டும்.

படத்தில் ஹரோ யோகி பாபுவா தமிழா என்று கேட்கும்அளவுக்கு காட்சிகள். ஆனாலும் பாபு வரும் காட்சிகளில்இயல்பாகவே சிரிக்க ஆரம்பித்துவிடுகிறோம். அவர் வசனம்

பேசும் விதம் ஒரு வித்தியாசமான நகைச்சுவையைத்

தருகிறது. பகடா பாண்டி என பசங்க படத்தில்

தோன்றியவர்தான் இப்போது வளர்ந்து தமிழாகி, படத்தின்

ஹீரோவாகவும் ஆகியுள்ளார். யோகி பாபுவுடனான

காட்சிகளில் தேறுபவர், காதல் காட்சிகளில் மட்டும் கொஞ்சம்

தயங்குகிறார். அவர் உடல் மொழியில் இயல்பு தவறுகிறது.

மற்றபடி, தமிழ் சினிமாவுக்கு இன்னுமொரு நாயகன் வந்தாச்சு.

கயல் ஆனந்தி பல படங்களில் நடித்த அனுபவமிருந்தாலும் இப்படத்தின்

ஹீரோயினான அவருக்கு ஒரு எளிமையான ரோல் தான். ஆனாலும் ரியல்

எக்ஸ்பிரஷன் கொடுத்திருக்கிறார்.

அரசியல்வாதியாக வரும் கே.எஸ்.ரவிக்குமார், பால சரவணன்,

லிவிங்ஸ்டன், ரேகா, சிங்கம் புலி, தேவிப்பிரியா என

அனைவருமே மிகையின்றி நடித்திருக்கிறார்கள்,

இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கும் இஷான் தேவ்,

இரண்டு ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார். பின்னணி

இசையும் ஓகே. சுகா செல்வனின் ஒளிப்பதிவில், மழைக்

காட்சிகள் மனதை நனைக்கின்றன. காட்சிகளை அழகாக

எடுப்பதில் காட்டிய கவனத்தை கதைத் தேர்விலும்

காட்டியிருக்கலாம் இயக்குநர் ஜெகன். ஆனால் முகம் சுளிப்பது

போன்றோ, நெளிய வைக்கும்படியோ எந்தக் காட்சியும்

இல்லை என்பதே பெரிய விஷயம்தான். அந்த வகையில்

பொழுதுபோக்க ஏற்ற படம்தான் என் ஆளோட செருப்பக்

காணோம்.

மொத்தத்தில் என் ஆளோட செருப்ப காணோம் படம் தேடி வந்தவர்களை

வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். குடும்பத்துடன் பார்க்க ஒரு முழு

எண்டர்டெயின்மெண்ட். சரி நீங்க செருப்ப தொலைச்சிடாதீங்க.

Realted News

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா...

Read More

சிகப்பு ரோஜாக்கள் 2

Read More

எனக்குள் ஒருவன்- திரை விமர்சனம்

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்