Cinema Seithigal

அறம் - விமர்சனம்

குடிநீர் பிரச்சனை ஒரு உலகளாவிய பிரச்சனையாக உருவெடுக்கும் நேரத்தில் அதன்

தொடர்ச்சியாக உருவாகக்கூடிய வெவ்வேறு பிரச்சனைகளும் முக்கியமானவை.

அதில் ஒரு பிரச்சனையை கையில் எடுத்து, ஒரு விறுவிறு த்ரில்லராக

சொல்லியிருக்கிறார் கோபி நயினார்.

ஸ்ரீஹரி கோட்டாவுக்கு அருகில் உள்ள ஒரு எல்லைப்புற கிராமம். குடிநீரே

கிடைக்காத அந்தக் கிராமத்தில் அன்றாட வாழ்க்கைக்கே போராடி வருகிறது

சுமதியின் (சுனு லட்சுமி) குடும்பம். காட்டு வேலைக்குச் செல்லும்போது தன் நான்கு

வயது மகள் தன்ஷிகாவையும் உடனழைத்துச் செல்கிறாள் சுமதி.

எதிர்பாராதவிதமாக அந்தக் குழந்தை, அங்கு தோண்டப்பட்டிருக்கும் ஆழ்துளை

கிணற்றிற்குள் விழுந்துவிடுகிறது.

இந்தக் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட நேரடியாக களத்திற்கு வருகிறார்

மாவட்ட ஆட்சியர் மதிவதனி (நயன்தாரா). அதிகாரவர்க்கம், பொதுமக்கள்,

அரசியல்வாதிகளிடமிருந்து வரும் அழுத்தங்களை மீறி அந்தக் குழந்தையை

மாவட்ட ஆட்சியரால் மீட்க முடிகிறதா என்பதே மீதிக் கதை.

அரசியல்வாதிகள் சொல்வதைக்கேட்காமல், தன்னிச்சையாக குழந்தையை மீட்கும்

முயற்சிகளை மேற்கொண்டதால் மதிவதனி இடைநீக்கம் செய்யப்பட்டு,

விசாரணையை எதிர்கொள்வதாகத் தொடங்கும் படம், அந்த விசாரணையின்

வழியாக பின்னோக்கி பயணம் செய்கிறது.

எல்லையோர கிராமங்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சனையையும் ஏழ்மையையும்

பின்னணியாக வைத்து மெல்ல மெல்ல தீவிரமடையும் படம், குழந்தை ஆழ்துளைக்

குழிக்குள் விழும்போது ஒரு த்ரில்லராக உருவெடுக்கிறது. அந்த நொடியிலிருந்து

படம் முடிவடையும்வரை, சீட் நுனியில் உட்காரவைக்கிறது திரைக்கதை.

ஆழ்துளைக் கிணற்றுக்குள் குழந்தைகள் விழுந்தால் என்னவெல்லாம் நடக்கும்,

மீட்பதில் இருக்கும் பிரச்சனைகள் என ஒவ்வொன்றையும் துல்லியமாக கண் முன்

கொண்டுவருகிறார் இயக்குனர்.

தமிழில் தற்போது நடித்துவரும் வேறு யாரையும் இந்தப் பாத்திரத்தில்

பொருத்திப்பார்க்க முடியாது. ஒட்டுமொத்தப் படத்திலும் அவருக்கு இரண்டே

ஆடைகள்தான். அவருடைய முகபாவங்கள் வெவ்வேறு வண்ணங்களைக்

காட்டுகின்றன.

அடுத்ததாக இந்தப் படத்தில் ஆச்சரியப்படுத்துபவர்கள், சுமதியாக நடித்திருக்கும்

சுனு லட்சுமியும் தன்ஷிகாவாக நடித்திருக்கும் குழந்தையும். சுனு லட்சுமி தமிழில்

ஏற்கனவே பல படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படம் அவருக்கு ஒரு பெரும்

கவனத்தைப் பெற்றுத்தரக்கூடும்.

இந்தப் படத்தில் தீயணைப்புத் துறை அதிகாரியாக வருபவர்கள், அரசு அதிகாரிகளாக

வருபவர்கள் ஏற்கனவே பல படங்களில் சிறு சிறு வேடங்களில்

தலைகாட்டியவர்கள்தான். ஆனால், அவர்கள் இனி இந்தப் படத்தின்

பாத்திரங்களாகவே நினைவுக்கு வருவார்கள்.

இம்மாதிரி ஒரு மீட்பு நடவடிக்கையை ஒளிப்பதிவுசெய்வது அவ்வளவு

சாதாரணமானதில்லை. பெரும்கூட்டம், பெரிய பள்ளங்களைத் தோண்டுவது என

நிஜமாகவே ஒரு மீட்பு நடவடிக்கையை கண்முன் நிறுத்துகிறது ஓம் பிரகாஷின்

ஒளிப்பதிவு. ஜிப்ரானின் இசை படத்தின் பதற்றத்தைக் கூட்டுகிறது.

Realted News

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா...

Read More

சிகப்பு ரோஜாக்கள் 2

Read More

எனக்குள் ஒருவன்- திரை விமர்சனம்

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்