Cinema Seithigal

மேயாத மான் - விமர்சனம்

மேயாத மான் என்ற தலைப்பு மிகவும் ஆச்சரியமூட்டுகிறது. ஏன்பரவசமூட்டுகிறது என்று கூடச் சொல்லலாம். தலைப்பு விஷயத்திலேயே நாயகன் ஓர் அடிப்படை நேர்மையைக் கடைபிடித்துள்ளார் என்றே தோன்றுகிறது

இதையே இயக்குநர் ரத்னகுமார், நாயகன் தான் மேயாத மான் என மிகச் சாதுரியமாக நிறுவுகிறார்.

ஒரே வகுப்பில் படித்தும், மூன்று வருடமாக நாயகியிடம் காதலைச்சொல்லாத நாயகன் (இதயம் முரளி) தான் மேயாத மேனாம். கண் முன்புல்லுக்கட்டு இருந்தும் அதை மேயாதவன், அதாவது காதலைச்சொல்லாததால் நாயகன் மேயாத மேனாம். அடடே.!

ஆனால், நாயகனுக்கு ஏன் நாயகியைப் பிடிக்கிறது என்றால், ‘வீடு விட்டா காலேஜ், காலேஜ் முடிஞ்சா வீடு, யாரிடமும் பேசாம, ஏன் கேன்டீனுக்குக்கூடப் போக மாட்டா. வீட்ல பார்த்த பையன் கூடவே என்கேஜ்மென்ட்பண்ணிக்கிறா-ன்னா அவ எவ்ளோ நல்லவ?’ எனச் சிலாகிக்கிறான்.

அடடடே.!!

வழக்கமான காதல் கதையாகத் தொடங்கும் படம், நாயகனின் நண்பன்வினோதாக வரும் விவேக் பிரசன்னாவின் நடிப்பில் பட்டையைக்கிளப்புகிறது

நாயகன்– நாயகி காதல் கதையை அப்படியே ஒதுக்கி விட்டு, விவேக்பிரசன்னாவிடம் முதல் பாதி முழுவதும் நிலை கொள்கிறது. நிச்சயமாக,விவேக் பிரசன்னா தவிர்க்க முடியாத பிசியான குணசித்திர நடிகராகவலம் வருவார். வைபவின் தங்கை சுடர்விழியாக நடித்திருக்கும்இந்துஜாவும் கலக்கியுள்ளார்.

படத்தின் முதல் பாதி மிக நன்றாக உள்ளது. ஒரு கொண்டாட்ட மனநிலைக்குத்தள்ளுகிறது. பாடல்களும், பின்னணி  இசையும் அதற்கு முக்கிய காரணம். இசையமைப்பாளர்கள் சந்தோஷ்நாராயணனும், பிரதீப் குமாரும்அதகளப்படுத்தியுள்ளனர். ‘எங்க வீட்டுகுத்துவிளக்கே’ எனும் துள்ளலான கானா பாடலில், கட்-ஷாட்களாகப் பல்வேறு முகங்கள் காட்டப்படுகின்றன. மிக ரசனையாகக் காட்சிப்படுத்தியுள்ளனர்.

விது அய்யன்னா ஒளிப்பதிவில் ராயபுரம் கொண்டாட்டப் பூமியாக மிளிர்கிறது. அண்ணன் – தங்கை பாசத்தைக் குத்துப்பாட்டாக மாற்றி அசத்தியுள்ளனர். ‘அனபெல் பேயி வர்றா; அன்பில் குட்டி தாய் வர்றா’ என விவேகின் பாடல் வரிகளும் அற்புதமாக உள்ளன. நிஜமாகவே படம்

மியூஸிக்கல் ட்ரீட் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. ‘ஆடலுடன்பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம்’ என்று கிராமோஃபோனில்ஒலிக்கும் பாடல் ஸ்ட்ரக் ஆகி விடும் காட்சி அசத்தல்.இதயம் முரளியாக வைபவ் கலக்கியுள்ளார்.

 ‘மேயாத மான்’ என்ற பெயரில் மியூசிக் பேண்ட் ஒன்று நடத்துகிறார். “எப்பவும் ஜலத்தை வாயில்வச்சு தான் குடிப்பேளா!?” என்ற நாயகியின் அம்மா கேட்கும் கேள்விக்கு வைபவ் தரும் பதிலால் திரையரங்கம் சிரிப்பொலியில் அதிர்கிறது. நல்ல பொண்ணு அல்லது மேயாத மானைக் காதலிக்கும் அக்மார்க் தமிழ்முதல் பாதியில் இருந்த கொண்டாட்டம், இரண்டாம் பாதியின் யூகிக்க முடிந்த வழக்கமான தமிழ் சினிமா ஃப்ளோவினால் இல்லாமல் போகிறது.

இதற்கே கதை இரண்டாம் பாதியில் தான் தொடங்குகிறது. கதையேஇல்லாமல் முதல் பாதியை ஜாலியாக ஒப்பேத்தியுள்ளனர். கார்த்திக்சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் ஃபிலிம்ஸ், இதே போன்று ரசனையானபடங்களைத் தயாரிக்க வேண்டும் .

Realted News

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா...

Read More

சிகப்பு ரோஜாக்கள் 2

Read More

எனக்குள் ஒருவன்- திரை விமர்சனம்

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்