Cinema Seithigal

மெர்சல் விமர்சனம்

அப்பாவின் மரணத்துக்குக் காரணமான வில்லன்களைப்ப ழிவாங்கும் ‘அபூர்வமான மெர்சல் சகோதரர்கள்’.

‘இலவச மருத்துவம்’ என்பது மதுரை தளபதியான அப்பா விஜய்யின் அற்புதக் கனவு. அவரது கனவை

நிறைவேற்றுவதைப்போல நடித்து, வியாபார வலை விரித்து நயவஞ்சகமாய் அப்பா விஜய்யின் வாழ்க்கையில்

விளையாடுகிறார் டாக்டர் எஸ்.ஜே.சூர்யா. 

இந்த மரண விளையாட்டில் விஜய்யின் இரண்டு குழந்தைகளும் இருவேறு திசைகளில் பிரிந்துவிடுகின்றன. அதில் டாக்டர் மாறனாக ஒரு விஜய், மேஜிக்மேன் வெற்றியாக இன்னொரு விஜய். இருவரும்எ ப்படி இணைகிறார்கள், அப்பாவின் மரணத்துக்கு எப்படிப்ப ழிதீர்க்கிறார்கள் என்பதை மேஜிக்காக `மெர்சல்’ காட்டியிருக்கிறார்கள்.

வேட்டி கட்டும் பிரச்னையில் ஆரம்பித்து விவகாரமான ஜி.எஸ்.டி வரை ஆங்காங்கே அரசியல் காரம் தூவி, படத்தை ட்ரெண்டிங்ஆ க்கியிருக்கிறார் இயக்குநர் அட்லி.

விஜய்க்கு மூன்று முகங்கள். அவர் ஸ்டைலிலேயே சொல்ல வேண்டுமென்றால் ‘தளபதி’ கதாபாத்திரத்தை மாஸாகப்ப ண்ணியிருக்கார். மாறன் கதாபாத்திரத்தை க்ளாஸாகப்பண்ணியிருக்கார், வெற்றி கதாபாத்திரத்தை ஸ்டைலாகப்பண்ணியிருக்கார்.

வடிவேலு., வரும்காட்சிகளில் மெல்லிய நகைச்சுவைத் தூறலை அள்ளித்தெளித்திருக்கிறார்.

வில்லன் எஸ்.ஜே. சூர்யா கிடைத்த கேப்பில் எல்லாம்சிங்கிள் தட்டி, விஜய்யிடமே `நீ சிக்ஸர் அடிப்பா’ என

ஸ்ட்ரைக்கைக் கொடுக்கிறார். நாயகிகளில் நித்யாமேனனுக்கு மட்டும் கொஞ்சம் நிறைவான

கதாபாத்திரம். அதைப் பக்கா எமோஷனலோடு  செய்திருக்கிறார்.

‘டேய் தம்பி’ என்று விஜய்யைக் கூப்பிட்டு `ரோஸ்மில்க் வாங்கித்தர்ரேன்டா’ என்னும் காட்சியில் மட்டும் ரசிக்கவைக்கிறார். 

நோலனாக வரும் யோகி பாபு ஒந்றிரண்டு காட்சிகளில் வந்தாலும், வழக்கம் போல் கவுன்ட்டரில் கலகலக்க

வைக்கிறார். சின்னஞ்சிறு வேடத்தில் வரும் காளி வெங்கட் கூட அழுத்தமாகத் தன் பாத்திரத்தினைப் பதிக்கிறார்.

 ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் மாஸ். `தமிழன்டா எந்நாளும்’ என இசையில் எனர்ஜி கூட்டியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். மிக அருமையான பின்னணி இசையைக்கொடுத்துள்ளார். மாஸ் சீன்களையும், ரொமான்ஸ் சீன்களையும் தன்இசையால் மெருகேற்றியுள்ளார்.

பிரமாண்டத்தைக் காட்ட, பறந்து பறந்து படம் பிடித்திருக்கிறது ஜி.கே.விஷ்ணுவின் கேமரா. திருவல்லிக்கேணி குடியிருப்பைத்த த்ரூபமாக வடிவமைத்திருக்கிறார் கலை இயக்குநர் முத்துராஜ். அலைபாயும் திரைக்கதையைக் கச்சிதமாக வெட்டி ஒட்டியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ரூபன்.

உயிர் காக்க வேண்டிய மருத்துவம் கல்லா நிரப்பும்வி யாபாரமாகிப்போன அவலம், அரசு மருத்துவமனைகளின் தரமேம்பாடு, ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா என கமர்ஷியல்படத்திலும் சமூகப் பிரச்னைகளைப் பற்றிப் பேசியதற்குப்பாராட்டுகள். அட்லி, ரமணகிரிவாசன் கூட்டணியில் வசனங்கள்டாப்.

Realted News

உறுப்பினர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான அறிவிப்பு…!

Read More

நமது சங்கத் திரையரங்க திறப்பு விழா இனிதே முடிந்தது

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்