Cinema Seithigal

துப்பறிவாளன் – விமர்சனம்

    ஒரு சிறுவனின் செல்ல நாய் துப்பாக்கிக் குண்டால் சுடப்பட்டு இறக்கிறது. அச்சிறுவன் இணையத்தில் ஒரு துப்பறிவாளரைத் தேடி, நாயைக் கொன்றவனைக் கண்டுபிடிக்கச் சொல்லி தன் சேமிப்பான என்னூத்தி சொச்சம் ரூபாயைத் தனியார் துப்பறிவாளரிடம் தருகிறான். இதனை ஏற்றுக் கொண்ட விஷால் அது குறித்து துப்பறியும் போது, பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கின்றன. அதில், இயற்கையான மரணமாக சித்தரிக்கப்பட்ட, சிம்ரனின் கணவனாக வரும் வின்செண்ட் அசோகன் என்பவரது இறப்பும், போலீஸ் அதிகாரியான ஆடுகளம் நரேன் இறப்பும் திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை என்பது தெரிய வருகிறது. அவர்களின் மரணத்திற்கு காரணமானவர்கள் யார்? எதற்காக அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள்? என்பதை விஷால் துப்பறிந்து கண்டுபிடித்தாரா இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

இந்தப் படத்தின் நாயகனும் சூப்பர் ஹீரோ. சகலகலா வல்லவன். தொழிற்முறை (!?) கொலைக்காரர்கள் எனச் சொல்லப்படுகிறவர்கள், நாயகனைச் சைனீஸ் ரெஸ்டாரன்ட்டிற்கு வருமாறு பகிரங்க அழைப்பு விடுத்து, கத்தியை அவர் மீது வீசிக் கொல்ல முனைகின்றனர். அனைவரையும் அசால்ட்டாக அலட்டிக் கொள்ளாமல் தெறிக்க விடுகிறார் (நாயகன் சீனர்களைத் துவம்சம் செய்யும் அக்காட்சி பக்தாஸைப் பரவசப்படுத்தும் என்பதில் நோ டவுட்).

மிஷ்கினின் படங்களில் மிகச் சிறந்த பாத்திரமைப்பு எனக் கொண்டாடப்பட்ட கதாபாத்திரங்களைக் கவனமாகத் துப்பறிவாளனில் கோர்த்துள்ளார். பிசாசில் இருந்து நாயகியையும், அஞ்சாதேவில் இருந்து வில்லனையும், சித்திரம் பேசுதடியில் இருந்து கடுகடுவென இருக்கும் நாயகனையும் உருவிக் கோர்த்துள்ளதைச் சொல்லலாம். படையப்பா படத்தின் க்ளைமேக்ஸில், காருக்குள் அமர்ந்திருக்கும் அப்பாஸ்க்கு கே.எஸ்.ரவிக்குமார் கொடுத்த ரோலை, மிஷ்கின் பிரசன்னாவிற்குக் கொடுத்துள்ளார். கால்களுக்கு கேமிரா ஆங்கிள் வைப்பது, மஞ்சள் சேலை பெண்ணின் நடனம் என மிஷ்கின் சிலதைத் தவிர்த்து சமரசங்கள் செய்திருந்தாலும், துப்பறிவாளன்’. எதையும் தன் அறிவாற்றலால் திறமையாக துப்பறிந்து விடும் விஷாலுக்கு, அவருடைய திறமைக்கு தீனி போடும் அளவுக்கான எந்த ஒரு வழக்கும் சிக்காமல் இதுவரை பார்த்திராத வித்தியாசமான துப்பறிவாளன் கதாபாத்திரத்தில் தனது அலட்டிக்கொள்ளாத நிதானமான நடிப்பால் கவனிக்க வைக்கிறார்.

விஷாலுக்கு அடுத்ததாக நெஞ்சில் நிற்பவர் வினய். வினய்க்கு இந்தப் படம் நிச்சயம் ஒரு மைல் கல். தற்போதைய டிரெண்டிங் ஸ்டைலிஷ் வில்லன் லிஸ்டில் வினயும் இடம்பிடித்து விட்டார். ஒரு கப் காபி, ஒரு கொடூர கொலை என்று வில்லன் கதாபாத்திரத்தில் கச்சிதமாய் பொருந்தியிருக்கிறார்.

பிரசன்னா,அனு இமானுவேல், ஆண்டிரியா என அனைவரும் அவரவர் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். துப்பறியும் கதையை தனக்கே உரித்தான திரைக்கதையில் அழகாக சொல்லியிருக்கிறார் மிஷ்கின். திருப்பங்கள் நிறைந்த விறுவிறுப்பான திரைக்கதை ரசிகர்களை கதையின் ஓட்டத்தில் பயணிக்கச் செய்கிறது.

இயக்குநர் பாக்யராஜூக்கும் வித்தியாசமான கதாபாத்திரம். அவர் கொலையாகும் காட்சியில் தனது அனுபவ நடிப்பால் அனுதாபத்தைப் பெற்று விடுகிறார். அரோல் கரோலியின் பின்னணி இசையும், கார்த்திக் வெங்கட்ராமனின் ஒளிப்பதிவும் கதையின் ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றன.

சினிமாவின் பார்வையில் ’துப்பறிவாளன்’ – துல்லியம்

Realted News

உறுப்பினர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான அறிவிப்பு…!

Read More

நமது சங்கத் திரையரங்க திறப்பு விழா இனிதே முடிந்தது

Read More

இயக்குநர் சங்கத் தேர்தல் அறிவிப்பு...!

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்