Cinema Seithigal

நெருப்புடா - விமர்சனம்

சென்னை சிலேட்டர்புரத்தைச் சேர்ந்தவர்கள் விக்ரம்பிரபுவும் அவரின் நான்கு நண்பர்களும். சிறுவயதிலேயே ஐவருக்கும் தீயணைப்பு வீரர்களாக வேண்டும் என்ற ஆசை, மனதில் தீயாய்ப் பற்றி எரிகிறது. வளர்ந்து வாலிபர்களான பிறகு, தனியாகத் தீயணைப்பு வண்டிவைத்து தன்னார்வமாகத் தீயணைக்கும் வேலையில் ஈடுபடுகிறார்கள். வேலைக்குப் போகும் முன்பாகவே தீயணைப்பு வண்டியில் பயணித்து பல உயிர்களைகாக்கின்றனர்.

இதனால் தீயணைப்புத் துறை  உயர் அதிகாரி ஒருவருக்கு ( நாகி நீடு ) இவர்களை தேர்வு எழுத வைத்து வேலையில் சேர்த்துக் கொள்ள ஆசை .

அவருக்கு ஒரு மகள் (நிக்கி கல்ராணி ). அவளுக்கும் குருவுக்கும் காதல் .

 தேர்வு எழுத நாள் நெருங்கும் வேளையில் இரவில் தனியாக வரும் — நண்பர்களில்  ஒருவனை  , இரண்டு ரவுடிகள் வழிமறித்து வம்பிழுத்து அடிக்கின்றனர் . பதிலுக்கு இவன் அடித்தவனை தள்ளிவிட போதையில் கீழே விழுந்த ரவுடி தலையில் அடிபட்டு இறக்கிறான் . விஷயம் வெளியே தெரிந்து போலீஸ் கேஸ் ஆனால் தேர்வெழுதி வேலைக்குப் போக முடியாது என்பது இவர்கள் பயம் .

தங்கள் ஏரியா சில்லுண்டி ரவுடி  ஒருவனிடம் (நான் கடவுள் ராஜேந்திரன்) உதவிக்குப் போகின்றனர் . அப்போதுதான் தெரிகிறது செத்துப் போன ரவுடி , மிகப் பெரிய தாதாவான புளியந்தோப்பு ரவி  என்பவனின் நெருங்கிய நண்பன் என்பது .

ஒரு பக்கம் போலீஸ் குறித்த பயம் , இன்னொரு பக்கம் துரத்தும் ரவியின் ஆட்கள் இவர்களிடம் நண்பர்கள் ஐவரும்  சிக்கினார்களா ? தப்பினார்களா? 

லட்சிய வேலை என்னாச்சு ? காதல் என்னாச்சு ? ரவுடியின் கோபம் என்ன ஆச்சு ? போலீஸ் நடவடிக்கை என்னாச்சு என்பதே இந்த நெருப்புடா . சும்மா ஊறுகாய் போலவும் கமல் உட்பட பலரால் கூட (மைக்கேல் மதன காமராஜன் )  இதுவரை காமெடியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த — ஆனால் கமர்ஷியல் சினிமாவுக்கு மிக அருமையாக செட் ஆகும் விஷயம், தீயணைப்பு வீரன் என்ற கதாநாயகத்தனம் .

முதல் படத்திலேயே அதை வைத்து கதை சொல்லி இருக்கும் அறிமுக இயக்குனர் அசோக் குமாருக்கு  ஒரு வார்ம் வெல்கம் !

பற்றி எரியும் குடிசைகளுக்கு இடையே குருவும் நண்பர்களும் முதியவர்கள் , ஊன முற்றவ்ர்கள் , பெண்கள் , குழந்தைகள் ஆகியோரை  காப்பாற்றும் காட்சியும்  காட்சி அமைப்பும் படமாக்கலும் பதட்டமும் பரபரப்பும் என்று,  முதல் காட்சியிலே முத்திரை பதிக்கிறார் அறிமுக இயக்குனர் அசோக் குமார் வாழ்த்துகள் . 

படத்துக்கு  உயிர் கொடுக்கும் அர்த்தமுள்ள பின்னணி இசையால் பிரம்மாதப்படுத்தியுள்ளார் சான் ரோல்டன் . பாடல்களும் சிறப்பு .

இயக்குனரின் மேக்கிங் வேலைக்கு   பெரும் பலமாக அமைந்துள்ளது ஆர் டி ராஜசேகரின் ஒளிப்பதிவு .

“என்னை  எப்படித்தான் கொடுமைப் படுத்தினாலும்  கொன்றாலும்  என் வேலை உயிரைக் காப்பாத்துறதுதான் . பதிலுக்கு இன்னொரு உயிரை எடுப்பது அல்ல “ என்ற குணாதிசயம் கொண்ட குரு கதாபாத்திரத்தில் – இது வரை அவர் அளவில்  அவர் எந்தப்  படத்திலும் நடிக்காத அளவுக்கு,  பெட்டரான நடிப்பை கொடுத்துள்ளார் விக்ரம் பிரபு .

எதிர்பாராத திருப்பமாக ஆக்ரோஷமான அதிரடி திருநங்கையாக வந்துஅதிர வைத்து அதகளப்படுத்தி அசத்தி  இருக்கிறார் நடிகை சங்கீதா .

பிரம்மாதம் . பிரம்மாதம் . அவருக்கு பின்னணிக் குரல் கொடுத்த கலைஞருக்கு ஆகா ஓகோ பாராட்டுகள் . சந்திரமுகி கேரக்டருக்குப் பிறகு அப்படி ஒரு மிரள வைக்கும்

நியாயமே இல்லாத அந்த  திருநங்கை கேரக்டரைக் கூட  நாம் கடைசியில் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு, கிளைமாக்ஸ் காட்சியை அமைத்த வகையிலும் முத்திரை பதிக்கிறார் இயக்குனர் அசோக் குமார் .

தீயணைப்பு வீரன் என்ற ஹீரோ கதாபாத்திரம் , அரவாணியின் மன நிலை , எதிர்பாராத   சில  திருப்பங்கள் , விளிம்பு நிலைக்  கதாபாத்திரங்கள்,  சிறப்பான படமாக்கல் , பொருத்தமான

இசை , அசத்தலான ஒளிப்பதிவு , நல்ல  நடிப்பு – ஆகிய தரமான பொருட்களால்  உருவான காரணத்தால் , கனகன வென இருக்கிறது, 

Realted News

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா...

Read More

சிகப்பு ரோஜாக்கள் 2

Read More

எனக்குள் ஒருவன்- திரை விமர்சனம்

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்