Cinema Seithigal

கதாநாயகன் - விமர்சனம்

தமிழ் சினிமாவில் மினிமம் கேரண்டி என்று ஒரு கதைக்களம் இருக்கும். அப்படி ஒரு கதைக்களம் தான் காமெடி படங்கள். அந்த வகையில் எழில் இயக்கத்தில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என செம்ம ஹிட் கொடுத்த விஷ்ணு அடுத்து முருகானந்தம் என்ற அறிமுக இயக்குனருடன் கைக்கோர்த்துள்ளார்.

``கெட்டவங்களை அடிக்கிறவன் மட்டும் தைரியசாலி இல்லை... கெட்டதைத் தட்டிக்கேட்டு அடி வாங்குறவனும் தைரியசாலிதான். ஆனா, இந்த ரெண்டும் இல்லாம ஓடி ஒளியிற ஒரு கோழைக்கு என் பொண்ணைத் தர மாட்டேன்- ஹீரோவைப் பார்த்து ஹீரோயினின் அப்பா பேச, சாமானியன் எப்படி ஹீரோவாகிறான் என்பதே கதை.

தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளர் தம்பிதுரை (விஷ்ணு விஷால்). அதே அலுவலகத்தில் அட்டெண்டர் அண்ணாதுரை (சூரி). கண்மணியைக் (கேத்ரின் தெரசா) கண்டதும் தம்பிதுரை  காதல்வயப்படுகிறார். அலுவலக உதவியாளர் அண்ணாதுரை, அவரது காதலுக்கும் உதவியாக இருக்கிறார். பல (சோதனை) முயற்சிகளுக்குப் பிறகு ஹீரோயினுக்கும் காதல் வருகிறது. ஆனால், ஹீரோயினின் அப்பா, `தன் மகளை தைரியமான ஒரு ஆம்பளைக்குத்தான் கல்யாணம் பண்ணிக்கொடுப்பேன்’ என்கிறார். நாய் துரத்தலுக்கே தெருத் தெருவாக ஓடும் தம்பிக்கும் தைரியத்துக்கும் வெகுதூரம். அப்படிப்பட்டவர் என்ன செய்து தன் காதலியைக் கரம்பிடிக்கிறார் என்பதே மீதிக் கதை.

இயக்குநர். தனது முதல் படத்தை, ரசிகர்களுக்கு ஓரளவு திருப்தி அளிக்கும்விதத்தில் எடுத்ததற்காக அவரைப் பாராட்டலாம். அதேபோல விஷ்ணு விஷால், கேத்ரீன், சூரி, அருள்தாஸ், ஆனந்தராஜ், `நான் கடவுள் ராஜேந்திரன் என தன் காமெடி ஸ்க்ரிப்ட்டுக்குத் தோதான ஆள்களைத் திரட்டியவகையிலும் பாஸ் ஆகியிருக்கிறார். கூடுதலாக ‘நட்பு’க்காக தன் ஜாலிகேலி டீமில் விஜய் சேதுபதியையும் இணைத்திருக்கிறார்.

சூரியின் நடிப்பு, இந்தப் படத்தில் கவனிக்கவைக்கிறது. அவர் கொடுக்கும் வித்தியாசமான முகபாவனைகள், வாய்ஸ் மாடுலேஷன்ஸுக்கு தியேட்டரில் நல்ல ரெஸ்பான்ஸ்.சில காட்சிகளில் வந்தாலும், விஜய் சேதுபதி செம ரகளை!

விஷ்ணுவை ஹீரோவாக மாற்றத் தேவையான வில்லனை இயக்குநர் ஆரம்பத்திலேயே அறிமுகப்படுத்திவிட்டார். ஆனால் டிவிட்ஸ்டுகளுக்காக வைக்கப்பட்டு இருக்கும் அந்த டாக்டர் எபிசோட், ஷேக் போர்ஷன் ஆகியவை தனித்தனியாக பார்க்க நன்றாக இருந்தாலும் அவை கதையின் ஓட்டத்துக்கு ஸ்பீட் பிரேக். அந்தக் காட்சிகளையும் கதையுடன் இன்னும் இறுக்கமாக கனெக்ட் செய்து இருந்தால் படமும் பரபரவென்று இருந்திருக்கும், ஆனந்த்ராஜ் வந்த பிறகு தான் படம் நிமிர்ந்து உட்கார வைக்கின்றது. சொல்ல போனால் அதன் பிறகு தான் இது காமெடி படம் என்றே சொல்ல தோன்றுகின்றது.ஷேக் பாயாக இவர் பேசும் ஒவ்வொரு வசனமும் சிரிப்பு சரவெடி.

இவருடைய கலாட்டாவை அடக்குவதற்குள் கிளைமேக்ஸில் மொட்டை ராஜேந்திரன் பாடகராக வந்து செய்யும் கலாட்டாவிற்கு அளவே இல்லை. அதனால், என்னமோ படம் முடிந்து வெளியே வரும் போது கொஞ்சம் சிரித்த முகத்துடன் வரலாம்.

லட்சுமணின் ஒளிப்பதிவில் படம் முழுவதும் செம்ம கலர்புல்லாக இருக்கின்றது.

ஷான் ரோல்டனின் இசையில், `தெனமும் ஓன் நெனப்பு பேபி...’

மற்றும் ‘பையன் மனசைப் பந்தாடும் லேடி...’ பாடல்கள் தாளம்போடவைக்கின்றன.

Realted News

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா...

Read More

சிகப்பு ரோஜாக்கள் 2

Read More

எனக்குள் ஒருவன்- திரை விமர்சனம்

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்