Cinema Seithigal

குற்றம் 23 – திரை விமர்சனம்

        சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் பாதிரியார் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். அதே நேரத்தில் அந்த பாதிரியாரை பார்க்க செல்லும் பெண் காணாமல் போகிறார். காணாமல் போன அந்த பெண்ணின் கணவரான பிரபல தொழிலதிபர் ஒருவர் போலீஸ் கமிஷனரான விஜயகுமாரின் உதவியை நாடுகிறார். இந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை துணை ஆணையராக வரும் அருண் விஜய் அந்த பெண் மாயமானது குறித்த தீவிர விசாரணையில் இறங்குகிறார்.

        அதே நேரத்தில் பாதிரியார் இறந்துவிட்டதாக போலீசில் தகவல் தெரிவிக்கிறார் படத்தின் நாயகி மகிமா நம்பியார். அடுத்த 2 நாட்களுக்கு பின்னர் காணாமல் போன தொழிலதிபரின் மனைவி கொலை செய்யப்பட்டு, அவரது உடல் குப்பைக் கிடங்கில் கண்டெடுக்கப்படுகிறது. எனவே இந்த சம்பவம் குறித்த தீவிர விசாரணையில் இறங்கும் அருண் விஜய் மகிமா நம்பியாரிடம் தனது விசாரணையை தொடங்குகிறார்.

        இந்த சம்பவம் குறித்து அருண் விஜய் அடிக்கடி மகிமாவை தொடர்பு கொள்வதால் மகிமாவின் பெற்றோர் கடுப்பாகின்றனர். இந்த நேரத்தில் மகிமாவை தனக்கு கல்யாணம் செய்து வைக்கும்படி நாயகன் அருண் விஜய் கேட்க அவரது பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்கின்றனர்.

        அதனைத்தொடர்ந்து அருண் விஜய்-மகிமா இடையே காதல் மலர்கிறது. அப்போது, கொலை சம்பவம் குறித்த சில முக்கிய தகவல்களை அருண்விஜய்யிடம் மகிமா தெரிவிக்கிறார்.

        படத்தில் விசாரணை காட்சிகளில் மட்டுமல்லாமல், அனைத்து இடத்திலும் தேவையான நடிப்புகளை கொடுத்து, ஆர்ப்பாட்டம் இன்றி அழகாக நடித்திருப்பது சிறப்பு. குறிப்பாக தன்னுடைய அண்ணி உயிரிழப்பு குறித்த வழக்கில் ஒரு போலீஸ் அதிகாரியாக தனது அண்ணனையே விசாரிக்கும் அந்த காட்சியில் முத்திரை பதித்திருக்கிறார்.

        மகிமா நம்பியார் படம் முழுக்க அழகாக வந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். ஒரு சில காட்சிகளில் வந்து செல்லும் நடிகையைப் போல் இல்லாமல், படம் முழுவதும் வலம் வருகிறார்.

        இதற்கு முன்பு நடித்த படங்களை விட இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் பேசப்படும்படி உள்ளது. இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் மகிமா, தன்னால் முன்னணி நடிகர்களுடனும் நடிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.

        நடிகர் விஜயகுமார் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் தனது அனுபவ நடிப்பின் முதிர்ச்சியை காட்டியுள்ளார். விசாரணையின் போது அருண் விஜய்யுடன் வரும் தம்பி ராமையா, தனக்குரிய மைண்ட் வாய்ஸ் பாணியில் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார். குறிப்பாக அரவிந்த் ஆகாஷ் கொலையின் போது அவர் பேசும் வசனங்கள் ரசிக்கும்படி உள்ளது.

        மற்ற படங்களைப் போலவே இந்த படத்திலும் அபிநயா தனக்குரிய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். இப்படத்தில் கனமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள அபிநயாவின் நடிப்பும் அவரது பேச்சும் ரசிக்கும்படி உள்ளது. படத்தில் வில்லன்களாக வரும் வம்சி கிருஷ்ணா மற்றும் அரவிந்த் ஆகாஷ் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள்.

        இருவருமே தனக்குரிய கதாபாத்திரத்தை சிறப்பாக அளித்துள்ளனர். சண்டைக் காட்சிகளிலும் சற்றும் பின்வாங்காத அவர்களது நடிப்பு ரசிக்கும்படி உள்ளது.

        படத்தின் இசையைப் பொறுத்தவரை இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் படத்தின் கதையை ஒட்டியே பாடல்களை அமைத்துள்ளது சிறப்பு. படத்தின் பின்னணி இசையை பொறுத்தவரை மிரட்டியிருக்கிறார். கே.எம்.பாஸ்கரின் ஒளிப்பதிவு வித்தியாசமான ஒளியில் அழகாக காட்சிகளை படம்பிடித்திருக்கிறார்.

Realted News

எனக்குள் ஒருவன்- திரை விமர்சனம்

Read More

ஜெயகாந்தன்-இலக்கிய பிதாமகன்

Read More

மேதினம் உருவானது எப்படி..!

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்