Cinema Seithigal

முப்பரிமாணம் – திரை விமர்சனம்

        ஒரே ஊரை சேர்ந்த ஷாந்தனுவும் சிருஷ்டியும் சிறுவயது தோழர்கள்.. சூழ்நிலையால் ஷாந்தனு வேறு இடம் மாறி, மீண்டும் இளைஞனாக அதே ஊருக்கு திரும்பும்போது ஷாந்தனுவின் மீதான சிருஷ்டியின் அன்பு காதலாக மாறி இருக்கிறது. ஆனால் ஏற்கனவே ஷாந்தனுவின் போலீஸ்கார அப்பாவால் சிருஷ்டியின் அண்ணன் திருமணம் நின்று போனதுடன், அவர் பத்து வருடம் சிறைத்தண்டனையும் அனுபவிக்கிறார்.

        அந்த ஆத்திரமும் வன்மமும் சேர்ந்துகொள்ள, வழக்கம்போல சிருஷ்டியின் வீட்டிலிருந்து காதலுக்கு எதிர்ப்பு கிளம்புகிறது.. காதலியின் வீட்டை எதிர்த்து அவளை திருமணம் செய்தால் சிருஷ்டியை கௌரவ கொலை செய்யக்கூட தயங்கமாட்டார்கள் என்பது தெரியவர, காதலை தியாகம் செய்கிறார் ஷாந்தனு,

        சிகிச்சை பெற்று வெளியே வரும் நாளில், சிருஷ்டி டாங்கேவுக்கும், நடிகரான ஸ்கந்தா அசோக்குக்கும் திருமணம் நடைபெறவிருக்கிறது. அப்போது திடீரென்று அந்த திருமணத்தின் உள்ளே புகுந்து, துப்பாக்கி முனையில் சிருஷ்டி டாங்கேவை கடத்திக்கொண்டு கேரளாவுக்கு செல்கிறார் சாந்தனு.

       இனி காதலர்கள் ஒன்று சேர போராட்டம் நடத்துவார்கள் என நினைத்தால் அது முற்றிலும் தவறு.. பின் என்ன நடக்கிறது என்பதுதான் மீதிகதை

நம்முடைய வாழ்க்கையில் சரி, தவறு என இரு விஷயங்கள் இருக்கும். ஆனால், அதையும் தாண்டி அதனால் ஏற்படும் விளைவுகளை உளவியல் ரீதியாக சொல்ல முயற்சித்திருக்கும் படம்தான் ‘முப்பரிமாணம்’.

       உருவத்திலும் நடிப்பிலும் குரலிலும் தன்னை ஆளே மாற்றிக்கொண்டு இருக்கிறார் ஷாந்தனு. அதனாலேயே மண்டபத்தில் பத்து பேரை அவர் அடித்து வீழ்த்தும்போது எளிதாக நம்மால் அதை நம்பமுடிகிறது. ஆரம்பகால காதல் காட்சிகளில் இயல்பான உருவத்தில் வந்தாலும் கூட அதிலும் ஷாந்தனுவின் நடிப்பில் நல்ல முதிர்ச்சி தென்படுகிறது.. திரையில் நாம் பார்ப்பது ஷாந்தனுவைத்தானா என்கிற ஆச்சர்யம் விலகவே ரொம்ப நேரம் ஆகிறது..

இன்றைய காலகட்டத்தில், காதலிக்கும் பல இளம்பெண்களின் மனநிலை இப்படித்தான் இருக்கிறது என்பதை பளிச்சென தனது நடிப்ப்பால் படம்போட்டு காட்டியுள்ளார் சிருஷ்டி.. சிருஷ்டியின் அண்ணனாக வரும் ரவி பிரகாஷ் படம் முழுவதும் தனது முகத்தில் வன்மத்தை தேக்கி வைத்து நடித்திருக்கிறார்…

சிருஷ்டி டாங்கேவுக்கு படத்தில் வலுவான கதாபாத்திரம். கிளைமாக்ஸ் காட்சியில் செண்டிமென்ட்டாக நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றிருக்கிறார்.

ஸ்கந்தா அசோக் படத்திலும் நடிகனாகவே வந்து, தனது நடிப்பால் அவரது கதாபாத்திரத்தை பூர்த்தி செய்திருக்கிறார். சாதி வெறி பிடித்தவராக வரும் ரவி பிரகாஷ் நடிப்பில் அசத்தியிருக்கிறார். படம் முழுக்க ஒரு வித்தியாசமான வில்லனாக இவரை பார்க்க முடிகிறது. தம்பி ராமையா, அப்புக்குட்டி, லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோர் காமெடிக்கென்று இருந்தாலும் பெரிதாக எடுபடவில்லை.

இயக்குனர் அதிரூபன் படத்தின் தலைப்புக்கேற்றவாறு பால்ய வயது நட்பு, அதன்பிறகு ஏற்படும் இளம் வயது காதல், காதல் முறிவுக்கு பிறகு ஏற்படும் பிரச்சினை என முப்பரிமாணங்களில் இப்படத்தை கொடுத்திருக்கிறார். முதல் பாதி காதல், ஊடல் என படம் மெதுவாக சென்றாலும், பிற்பாதியில், அவளை கடத்தியதற்கான காரணங்களின் முடிச்சுகளை அவிழ்க்கும் இடங்களில் எல்லாம் படம் விறுவிறுப்படைகிறது. கிளைமாக்சில் தனது குரு பாலாவின் பாணியை கடைபிடித்து அனைவரையும் கண்கலங்க வைத்துவிடுகிறார்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். திரையுலக பிரபலங்கள் அனைவரும் சேர்ந்து ஆடும் ‘பார்ட்டி சாங்’ பாடல் மட்டும் ரொம்பவும் ரசிக்கும்படி இருக்கிறது.

பின்னணி இசையில் ஜி.வி.பிரகாஷ் தனது பாணியை பின்பற்றி பாராட்டு பெறுகிறார். ராசாமதியின் ஒளிப்பதிவில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

Realted News

எனக்குள் ஒருவன்- திரை விமர்சனம்

Read More

ஜெயகாந்தன்-இலக்கிய பிதாமகன்

Read More

பாராட்டு விழா..!

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்