Cinema Seithigal

யாக்கை – சினிமா விமர்சனம்

நாயகன் கிருஷ்ணா கோயம்புத்துரில் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். நாயகி சுவாதியும் அதே கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறாள். அவளை பார்த்தவுடனேயே காதல் வயப்படுகிறார் கிருஷ்ணா. ஒருகட்டத்தில் இருவரும் நட்பாக பழக ஆரம்பிக்க, நாளடைவில் அது காதலாக மாறுகிறது.

சுவாதி படிப்பு மட்டுமில்லாமல், தனது அப்பா நடத்திவரும் ஊனமுற்ற குழந்தைகளின் காப்பகத்திலும் சென்று அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையை நடத்தி வரும் குரு சோமசுந்தரம், அரிய வகை ரத்தங்கள் உள்ள அனைவரையும் தேடிக்கண்டுபிடித்து, அவர்களை ஏதாவது ஒரு விபத்துக்குள்ளாக்கி, அந்த ரத்தத்தை எடுத்து வெளிநாடுகளுக்கு சப்ளை செய்து பணம் சம்பாதித்து வருகிறார்.  இதில், சுவாதியின் ரத்தமும் அரிய வகை ரத்தம் என்று அறியும் குரு சோமசுந்தரம், அவளை நோக்கியும் தனது பார்வையை செலுத்துகிறார். இதற்கிடையில், கோவையின் மிகப் பெரிய மருத்துவமனையின் எம்.டி.யான கிருஷ்ணமூர்த்தி என்னும் ராதாரவி, ஒரு நாள் இரவில் தன்னுடைய மருத்துவமனையின் 14-வது மாடியில் இருந்து காரில் வைத்து கீழே தள்ளப்பட்டு கொலை செய்யப்படுகிறார்.

இதனை விசாரிக்க வருகிறார் போலீஸ் துணை ஆணையர் பிரகாஷ்ராஜ். விசாரணையில் ராதாரவியின் மகனான குரு சோமசுந்தரத்திற்கு இந்தக் கொலையில் தொடர்பு இருக்கலாம் என்று அவர் சந்தேகிக்கிறார். ஆனால், அவர் அந்த கொலையை செய்யவில்லை என்பது தெரியவருகிறது.

அப்படியானால் ராதாரவியை கொன்றது யார்? அவருடைய கொலைக்கு பின்னணி என்பதை பிரகாஷ் ராஜ் கண்டுபிடித்தாரா? குரு சோமசுந்தரத்தால், சுவாதியின் நிலை என்னவாயிற்று? என்பதற்கு பிற்பாதியில் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.

கல்லூரி நாயகனாக கிருஷ்ணா துள்ளலான நடிப்பில் அசத்தியிருக்கிறார். சுவாதியுடன் ரொமான்ஸ் காட்சிகளில் எல்லாம் தனது திறமையான நடிப்பில் கவர்கிறார். கிளைமாக்ஸ் காட்சிகளில் செண்டிமெண்டாக நடித்து அனைவரையும் அழ வைத்திருக்கிறார்.

சுவாதி படத்தில் ரொம்பவும் அழகாக தெரிகிறார். இவர் கொடுக்கும் ஒவ்வொரு முகபாவணைகளும் அத்தனை அழகு. படத்தில் ரொம்பவும் மெச்சூரிட்டியான கதாபாத்திரம். அதை சிறப்பாக செய்திருக்கிறார். காது கேட்காத, வாய் பேச முடியாத குழந்தைகளிடம் இவர் பழகும் காட்சிகள் எல்லாம் அருமை.

படத்தில் முதல் பாராட்டுக்குரியவர் பிரகாஷ்ராஜ்தான்.. எத்தனை, எத்தனை கசப்பு வார்த்தைகள் அவரைப் பற்றி வெளிப்பட்டாலும் நடிப்பென்று வந்துவிட்டால் அவருக்கு நிகர் அவரே..இதில் துவக்கக் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் அவர் இருக்கின்ற ஷாட்டுகளில் அதிகம் கவனத்தை ஈர்த்திருப்பதும் அவர்தான். சுகர் மாத்திரை சாப்பிடும் பேஷண்ட்டாகவும் அறிமுகமாகி கடைசியில் அதையே திரைக்கதையில் ஒரு யுக்தியாக பயன்படுத்தியிருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனம்தான்..!

இயக்குர் குழந்தை வேலப்பன் பணத்துக்காக மக்களின் உயிரோடு விளையாடும் தனியார் மருத்துவத்துறையின் தகிடுதத்தங்களை படம் பிடித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்றிருக்கிறார். இதற்காக அவருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கலாம்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது. பின்னணி இசையும் நிறைவாக இருக்கிறது. சத்யா பொன்மாரின் ஒளிப்பதிவு நிறைய காட்சிகள் நமக்கு அழகிய ஓவியமாக தெரிகிறது. பாடல் காட்சிகளில் இவரது கேமரா மேலும் பளிச்சிடுகிறது.

Realted News

எனக்குள் ஒருவன்- திரை விமர்சனம்

Read More

ஜெயகாந்தன்-இலக்கிய பிதாமகன்

Read More

உறுப்பினர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான அறிவிப்பு…!

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்