Cinema Seithigal

போகன் – விமர்சனம்

        அரசர் குடும்பத்தில் பிறந்து வாழ்ந்து வந்த அரவிந்தசாமி கடன் சுமையால் தெருவுக்கு வர, மீண்டும் சுகமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் பல வகையில் மக்களை ஏமாற்றி பணம் பறித்து சுக வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

        அப்போது தான், அகழ்வாராய்ச்சி நடக்கும் இடத்தில் ஒரு ஓலைச்சுவடி அரவிந்த சாமி கையில் கிடைக்கிறது. அந்த ஓலைச்சுவடியில் கூடு விட்டு கூடு பாயும் வித்தைக்கான மந்திரம் எழுதப்பட்டியிருக்க, அதை பயன்படுத்தி வங்கி, நகைக் கடை என சில இடங்களில் பணத்தை கொள்ளையடிக்கிறார் அரவிந்த சாமி.

        வங்கி மேலாளராக வரும் நரேனை இந்த கொள்ளையில் மாட்டி விடுகிறார் அரவிந்த சாமி. போலீசார் நரேனை கைது செய்கின்றனர். தனது தந்தை நரேனை காப்பாற்ற இந்த வழக்கில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார் போலீஸ் அதிகாரியாக வரும் ஜெயம் ரவி (AC).தனது போலீஸ் மூளையை பயன்படுத்தி நண்பன் போல் நடித்து அரவிந்த சாமியை கைது செய்கிறார் ஜெயம் ரவி. ஆனால், அரவிந்த சாமி தனது கூடு விட்டு கூடு பாயும் வித்தையை வைத்துக் கொண்டு ஜெயம் ரவியின் உடலுக்குள் பாய்ந்து விடுகிறார். ஜெயம் ரவியின் உடலுக்குள் அரவிந்த சாமி இருந்து கொண்டு ஆடும் ஆட்டம் தான் இந்த ‘போகன்’.

        அரவிந்தசாமி முதல் பாதியில் வில்லத்தனத்தையும் இரண்டாம் பாதியில் ஹீரோயிசத்தையும் காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். தனி ஒருவனில் முழுக்க முழுக்க வில்லனாக வந்த அரவிந்த சாமி இந்த படத்தில் இரண்டாம் பாதியில் ஹீரோ ஸ்கோரை செம்மையாக செய்திருக்கிறார்.

        ஜெயம் ரவி ஜோடியாக வரும் ஹன்சிகா தனது குழந்தைத்தனமான நடிப்பை இதில் வெளிப்படுத்தியுள்ளார். ஜெயம் ரவி ஹன்சிகாவை பெண் பார்க்க வரும் நேரத்தில் ஹன்சிகா அடிக்கும் லூட்டிகள் ரசிக்க வைக்கிறது. பாடல் காட்சிகளில் அரவிந்த சாமி மற்றும் ஹன்சிகா காதல் விளையாட்டை அள்ளித் தெளித்திருக்கிறார்கள்.

        ஒரு வித்தியாசமான கதைக்களத்தை கையிலெடுத்து படமாக்கியிருக்கிறார் இயக்குநர் லஷ்மன். முதற்பாதி கதையமைப்பு அருமை.. கொள்ளையடிப்பதற்காக அரவிந்த் சாமி செய்யும் தந்திரங்கள், கண்ணால் காட்டும் வித்தைகள் மிகவும் ரசிக்க வைக்கின்றன. ‘ஆதித்யா’ கதாப்பாத்திரத்திற்கு என்று ஒருவித வித்தியாசமான உடல்மொழியை வைத்திருப்பதும், அதை ஆங்காங்கே ‘வேறு ஒரு வகையில்’ வெளிப்படுத்தியிருப்பதும் அருமை.

        ஜெயம் ரவி, அரவிந்த் சாமி இருவருக்கும் நடிப்பதற்கு சமமான வாய்ப்புகளை கொடுத்து ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார்’.மழை வந்துச்சுனா குருவி, பறவையெல்லாம் கூட்டில் போய் இருந்திடும், ஆனா பருந்து மட்டும் தான் அந்த மேகத்துக்கும் மேல போய் பறக்கும்… நான் பருந்து டா’, என ஆரம்பித்து பல டயலாக் வரிகளை வாரிக் குவித்த இயக்குனர் லக்‌ஷ்மணை பாராட்டலாம்.

        டி இமானின் இசையில் செந்துரா மற்றும் போகன் பாடல்கள் கேட்கும் ரகம், பின்னனி இசை பல படங்களில் கேட்ட இசையாக தான் உள்ளது. செளந்தர்ராஜன் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கலர்புல்லாக உள்ளது.

Realted News

உறுப்பினர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான அறிவிப்பு…!

Read More

நமது சங்கத் திரையரங்க திறப்பு விழா இனிதே முடிந்தது

Read More

இயக்குநர் சங்கத் தேர்தல் அறிவிப்பு...!

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்