Cinema Seithigal

எனக்கு வாய்த்த அடிமைகள் - விமர்சனம்

        ‘நண்பேன்டா’ என்று நெஞ்சை நிமிர்த்துகிற பிரண்ட்ஷிப், அதே நண்பனால் ‘செத்தேன்டா’ என்று தெறித்து ஓடினால் அதுதான் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’. தற்கொலை செய்து கொள்வதாக அறிவித்துவிட்டு பதுங்கிவிடுகிற ஜெய்யை மீட்க, தேடுதல் வேட்டையை ஆரம்பிக்கிற அவரது மூன்று நண்பர்களுக்கு ஏற்படுகிற படு பயங்கர எக்ஸ்பீரியன்ஸ்தான் இரண்டரை மணி நேர படம்.

       படு பயங்கரம் அவர்களுக்குதானே ஒழிய, தியேட்டருக்கு இல்லை என்பது ‘நமக்கு வாய்த்த நல்ல நேரம்!’ நிமிஷத்துக்கு ஒரு ஜோக் என்று படம் முழுக்க தெளித்துக் கொண்டேயிருக்கிறார்களா... சிரித்து மகிழ்கிற ரசிகனால் சாரல் மழையாகிறது முன் சீட்டில் அமர்ந்திருப்பவரின் பின் பக்கம்! இந்தப்படத்தின் டயலாக் ரைட்டருக்கு மட்டும் டிக்கெட் காசில் பாதி போய் சேர்ந்தால், அதுதான் வாய் விட்டு சிரித்தவர்களின் நோய் விட்ட புண்ணியம்!

        ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் ஹீரோ ஜெய்யும், ஹீரோயின் பிரணீதாவும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். ஒரு பக்கம் தன்னைலவ்விக்கொண்டே இன்னொரு பக்கம் வெறொரு இளைஞனை ரூட்டு விடும் பிரணீதாவின் ஒரே கோப்பையில் ரெண்டு வாய் பார்முலாவைப் பார்த்து அதிர்ச்சியடையும்ஜெய் அவரைப் பிரிந்து காதல் தோற்றுப் போன சோகத்தில் ஹோட்டல் ஒன்றில்ரூம் போட்டு தற்கொலை செய்ய முடிவெடுக்கிறார்.

    அவரைத் தேடி தெருத்தெருவாக அலையும் அவரது நண்பர்களான பேங்க் கேஷியர் கருணாகரன், ஷேர் ஆட்டோ டிரைவர் காளி வெங்கட், கால் சென்டரில் வேலை செய்யும் நவீன் மூவரும் வெவ்வேறு பிரச்சனைகளில் மாட்டிக் கொள்கிறார்கள்.

    அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா? நண்பன் ஜெய்யை தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றினார்களா? என்பதே கிளைமாக்ஸ்.

        படத்தில் காளியின் நடிப்பு அட்சர சுத்தம். வார்த்தைக்கு வார்த்தை சர்வ அலட்சியமாக இவர் கொடுக்கும் கவுன்ட்டரை பார்த்தால், அந்த கவுண்டரே கட்டிப் பிடித்து பாராட்டினாலும் ஆச்சர்யமில்லை. அப்படியொரு அசால்ட். அவருக்கே தெரியாமல் கொலை பழியில் சிக்கும் அந்த காட்சியும், அதை யோசித்த விதமும் பலே பலே!கருணாகரனை விட, அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் அந்த பெண் சிரிக்க வைக்கிறார். எதிர்காலம் இருக்கு பொண்ணு.மற்றொரு நண்பராக வரும் நவீன், செம பல்க் ஆக இருக்கிறார். இவருக்கே ஒரு சீனில் ரோப் கட்டி பறக்க விடுகிறார்கள். அவ்வளவு அடிபாடுகளுக்கு மத்தியிலும், தன் நண்பன் ஜெய் உசிரோடு இருக்கிறான் என்று சந்தோஷப்படும் அவர், கேரக்டராக மனதில் இடம் பிடிக்கிறார்.

        ஜெய்யின் மனசை மாற்ற ஒரு சீனில் வந்துவிட்டு போகிறார் சந்தானம். தமிழகத்தில் மட்டுமல்ல, உலகம் முழுக்க காதல் தோல்வியால் தற்கொலைக்கு தள்ளப்படும் அத்தனை பேருக்குமான டானிக் அவர் கொடுக்கும் அந்த லெச்சர். அதுவும் சந்தானம் வாயால் கேட்பதில் தனி சுகம் கூட!

        மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு அவ்வளவு லைவ்! சந்தோஷ் நாராயணன் இசையில் மண்ணெண்ணை வேப்பெண்ணை பாடல் கொல குத்து.

Realted News

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா...

Read More

சிகப்பு ரோஜாக்கள் 2

Read More

எனக்குள் ஒருவன்- திரை விமர்சனம்

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்