Cinema Seithigal

அதே கண்கள் – திரை விமர்சனம்

        டாப் ஹீரோ, ஹீரோயீன் கால்ஷீட், பெரிய பேனர், டாப் டெக்னீஷியன்கள், மரண ஹிட் பாடல்கள், பரபர விளம்பரங்கள் இதெல்லாம் தேவையில்லை. நல்ல கதையும், தெளிவான படமாக்கலும் இருந்தால் நாங்கள் இருகரம் கூப்பி வரவேற்போம் என்று ரசிகர்களைச் சொல்ல வைத்திருக்கிற இன்னொரு படம் அதே கண்கள்.

        சொந்தமாக உணவகம் நடத்திவரும் பார்வை யற்ற இளைஞர் வருண் (கலையரசன்). அவரது தோழியான பத்திரிகையாளர் சாதனா (ஜனனி) அவரை ஒருதலையாகக் காதலிக்கிறார். வருணோ இரக்க குணம் கொண்ட தீபாவை (ஷிவதா) காதலிக்கிறார். ஒருநாள் உணவகம் முடிந்து வீடு திரும்பும்போது சாலை விபத்தில் சிக்குகிறார். அந்த விபத்தின் மூலம் பதினைந்து வயதில் பறிபோன பார்வை, வருணுக்கு திரும்பவும் கிடைத்துவிடுகிறது.

        பார்வை கிடைத்துவிட்டாலும் காதலி காணாமல் போயிருப்பதைக் கண்டு பதற்றமடையும் வருண், அவரைத் தேடிச் செல்கிறார். அவருக்குக் காதலி கிடைத்தாரா? சாதனாவின் ஒருதலைக் காதல் என்னவானது ஆகிய கேள்விகளுக்கு விறுவிறுப்பாகப் பதில் தருகிறது அறிமுக இயக்குநர் ரோஹித் வெங்கடேசனின் ‘அதே கண்கள்’.

        காதல் கதையாகத் தொடங்கும் படம், திடீரென்று த்ரில்லராக மாறுவதுதான் திரைக்கதையின் சிறப்பு. மர்ம முடிச்சுகளை இறுக்கமாகப் போடும் இயக்குநர் படிப்படியாக அதை அவிழ்ப்பதில் பெருமளவு நேர்த்தியாகவே செயல்பட்டுள்ளார்.

        போலீஸ் கான்ஸ்டபிளை வைத்துக்கொண்டு நாயகன் பார்க்கும் துப்பறியும் வேலை சுவாரஸ்யமாக இருந்தாலும் சில இடங்களில் நம்பகத்தன்மை அடிவாங்குகிறது. ஜனனிக்கும் கலையரசனின் அம்மாவுக்கும் எழும் சந்தேகங்கள் நியாயமானவை. காட்சிகளின் ஓட்டத்திலும் சஸ்பென்ஸ்களை விடுவிப்பதில் திரைக்கதையாசிரியரான இயக்குநர் காட்டியிருக்கும் தந்திரங்களும் இந்தக் குறைகளை ஈடுகட்டிவிடு கின்றன. காதல், சஸ்பென்ஸ், நகைச்சுவை, இசை ஆகிய அம்சங் களுக்குச் சரியான விகிதத்தில் இடமளித்திருப்பதால் நிறைவான பொழுதுபோக்குப் படம் பார்த்த உணர்வைத் தந்துவிடுகிறார் இயக்குநர். மோசடிக் கும்பல் பார்வையற்றவர்களைக் குறி வைப்பதில் உள்ள நுட்பம் திரைக் கதையின் சிறப்புகளில் ஒன்று.

        கலையரசன் தனக்குரிய கதாபாத்திரத்தில் தேவைக்கேற்ப துல்லியமாக நடித்துள்ளார். குறிப்பாக கண்பார்வையற்றவராக குறைவான நேரங்களே வந்தாலும், அந்த காட்சிகளில் அவரது நடிப்பு பாராட்டப்படும்படி உள்ளது.

        ஜனனி ஐயர் தனக்குரிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக காதல் காட்சிகளில் இவரது நடிப்பு அனைவரையும் ஈர்க்கிறது.

        தனித்துவமான படங்களை தேர்தெடுத்து நடிக்கும் ஷிவதா நாயர் இப்படத்திலும் தனக்குரிய கதாபாத்திரத்தில் கலக்கி உள்ளார். முதல் பாதியில் காதல் காட்சிகளில் புன்சிரிப்புடன் வரும் ஷிவதா, இரண்டாவது பாதியில் மிரட்டியுள்ளார். அழகான சொர்ணாக்காவாக அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

        கதைக்கு தேவையான இடத்தில் வரும் பாலசரவணன் அவரது நடிப்பிலும், காமெடியிலும் எப்போதும் போல கலக்கியிருக்கிறார்.

        இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் தேவையில்லாத காட்சிகளை திணிக்காமல் கதைக்கு தேவையான காட்சிகளை மட்டுமே படமாக்கியிருப்பது சிறப்பு. குறிப்பாக ஷிவதாவின் கதாபாத்திரத்திரத்தை மிரட்டலாக கொடுத்திருப்பது மிகச்சிறப்பு.

        ஜிப்ரான் இசையில் பாடல்கள் காதிற்கு இனிமையான உள்ளது. படத்தின் பின்னணி இசை, குறிப்பாக ஷிவதா வரும் காட்சிகளில் பாடலோடு வரும் பின்னணி இசை அனைவரையும் கவரும்படி இருக்கிறது.

        படத்தின் ஒளிப்பதிவளர் ரவிவர்மன் நீலமேகம் காட்சிகளை சிறப்பாக படமாக்கியிருக்கிறார்.

Realted News

எனக்குள் ஒருவன்- திரை விமர்சனம்

Read More

ஜெயகாந்தன்-இலக்கிய பிதாமகன்

Read More

பாராட்டு விழா..!

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்