Cinema Seithigal

படத்தின் தலைப்பை ஆன்லைனில் பதிவு செய்வது

படத்தின் தலைப்பை ஆன்லைனில் பதிவு செய்வது சம்பந்தமாக நமது சங்க உறுப்பினர்களின் கலந்தாய்வு கூட்டம் நேற்று 24-07-2016 மாலை 6 மணிக்கு வடபழனி RKV ஸ்டுடியோவில் நடைபெற்றது. மேலும் நமது சங்க தலைவர் திரு.விக்ரமன் அவர்கள் தலைமை தாங்கினார். இதில் நமது சங்க நிர்வாகிகள் திரு.RK.கண்ணன், திரு.ரமேஷ்கண்ணா, திரு.மனோஜ்குமார், திரு.K.நம்பிராஜன், திரு.T.K.சண்முகசுந்தரம், திரு.R.ஜீவா, திரு.ராஜாகார்த்திக், திரு.N.ஏகம்பவாணன், திரு.ரவிமரியா, திரு.P.விருமாண்டி, திரு.R.கண்ணன், திரு.A.ஜெகதீசன், திரு.ஐந்து கோவிலான் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கலந்தாய்வு கூட்டத்தில் சுமார் 300 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் உதவி இயக்குநர்கள் தினசரி ஊதியம் பெறுவது சம்பந்தமாக விவாதிக்கப்பட்டு, அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் படத்தில் பணிபுரியும் உதவி, துணை மற்றும் இணை இயக்குநர்களுக்கு தினசரி ஊதியம் வழங்க வேண்டும் என்று ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. மேலும் படத்தின் தலைப்பை ஆன்லைனில் பதிவு செய்வதை வலியுறுத்தி வரும் 28-07-2016 அன்று காலை 10 மணிக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அனைத்து உறுப்பினர்களாலும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே 28-07-2016 அன்று நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நமது சங்க உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ப்படுகிறார்கள். – விக்ரமன், தலைவர், ஆர்கே.செல்வமணி, பொதுச்செயலாளர், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம்.

Realted News

சிகப்பு ரோஜாக்கள் 2

Read More

எனக்குள் ஒருவன்- திரை விமர்சனம்

Read More

நமது சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம்

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்