Cinema Seithigal

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்

  • உறுப்பினர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற SRM மற்றும் ACS மருத்துவமனைகளில் இலவச மருத்துவ அட்டை வழங்கப்பட்டுள்ளது.

  • ஆயிரத்தில் ஒருவன், பல்லாண்டு வாழ்க, நினைத்தை முடிப்பவன் போன்ற படங்களுக்கு எழுத்தாளராக பணிபுரிந்த திரு.RK.சண்முகம் அவர்களுக்கு ரூ.1,20,000 உதவித்தொகை வழங்கப்பட்டது.

  • கவிஞர் திரு.திருப்பத்தூரான் (எ) காளிதாசன் அவர்களுக்கு SRM மருத்துவமனையில் இலவச மருத்துவ சிகிச்சை பெற உதவியது மற்றும் அவருக்கு மருத்துவ உதவித்தொகையாக ரூ.60,000 வழங்கப்பட்டது.

  • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நமது உறுப்பினர்கள் 100 பேருக்கு FEFSI ன் மூலமாக வெள்ள நிவாரண உதவி பெற்று வழங்கப்பட்டது.

  • தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திலிருந்து தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திலும், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திலிருந்து தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திலும் உறுப்பினராவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு குறைந்த கட்டணத்தில் இரு சங்க உறுப்பினர்களும் சேர்வதற்கு வழிவகை செய்யப்பட்டது.

  • எந்த சங்கத்திலும் உறுப்பினராக இல்லாதவர்களும் கதை பதிவு செய்வதற்கு உறுதி பத்திரம் பெற்றுக்கொண்டு அவர்களின் கதையை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

  • சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களின் சுய தகவல் படிவம் கொடுக்கப்பட்டு உறுப்பினர்களின் தகவல்கள் பெறப்பட்டுவருகிறது.

  • கதை சம்மந்தமாக வந்த பல பிரச்சினைகள் பேசி தீர்த்துவைக்கப்பட்டன.

  • வாரத்தில் ஒரு நாள் மட்டுமே இருந்த கதை பதிவை வாரத்தி இரண்டு நாட்களாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் உறுப்பினர்கள் கதை பதிவு செய்ய எளிதாக உள்ளது.

  • ACS கல்லூரியில் சங்க உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு 2 பொறியியல் கல்லூரி இடங்களும், 3 கலை மற்றும் அறிவியல் கல்லூரி இடங்களும் இலவசமாக பெற்று வழங்கப்பட்டுள்ளது.

  • பல ஆண்டுகளாக இருந்து வந்த சம்மேளனத்துடன் இருந்து வந்த பிரச்சினையானது பேசி தீர்க்கப்பட்டது.

Realted News

புத்தாண்டு தினத்தில் மேலும் ஓர் நற்செய்தி..!

Read More

ஜெயகாந்தன்-இலக்கிய பிதாமகன்

Read More

எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் இலவச சிகிச்சை

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்