National Award Winners

S.P.முத்துராமன்

சுப. முத்துராமன் (பிறப்பு 7 ஏப்ரல் 1935) . தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 75க்கும் கூடுதலானத் திரைப்படங்களை இயக்கி உள்ளார். தமிழ்த் திரையுலகில் வெற்றி நாட்டிய ஒருசில வணிகநோக்கு இயக்குனர்களில் இவரும் ஒருவர். துவக்கத்தில் சிவாஜி,ஜெய்சங்கர்மற்றும் கமலஹாசன் படங்களை இயக்கி வந்தார். 1970களின் பிற்பகுதிகளில் இவருக்கும் ரஜினிகாந்திற்கும் ஏற்பட்ட தொழில்முறை உறவு பலப்பட்டு 25 திரைப்படங்களை இருவரும் இணைந்து உருவாக்கினர். ரஜனியின் திரைவாழ்வை வடிவமைத்ததிலும் அவரை வணிக அளவில் பெரும் வெற்றி நாயகராக மாற்றியதிலும் இவருக்குப் பெரும் பங்கிருந்தது. இவர் இரு தென்மண்டல ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் தமிழக அரசின் சிறந்த இயக்குனருக்கான விருதையும் பெற்றுள்ளார் 

தேங்காய் சீனிவாசன் தீடீரென்று மரணமடைவதால் அவரின் மூத்த மகன் ரஜினிகாந்த் மிகச் சிறுவயதிலேயே குடும்ப பாரத்தை ஏற்கிறார். அவருக்கு 2 தம்பிகள் ஒரு தங்கை. அவருக்கு தேங்காய் சீனிவாசன் வேலை செய்த நிறுவன முதலாளி வேலை தருகிறார். தம்பி தங்கைகளை கான்வென்டில் படிக்க வைக்கிறார். அவர்கள் படிப்புக்காக நிறைய வருமானத்திற்கு மேல் செலவு செய்ய நேருகிறது. அவருக்கு பணநெருக்கடி ஏற்படும் சமயங்களில் அவரின் நண்பர் சோ ராமசாமியும் அவரின் நிறுவன (அச்சக) முதலாளியும் உதவுகிறார்கள். இவரின் நிறுவனத்தில் உள்ள சங்கீதாவுடன் காதல் வசப்படுகிறார். அவரும் காதலிக்கிறார் தம்பி தங்கைகளுக்காக இவர் பணம் செலவிடவேண்டியுள்ளதாலும் இவருடன் திருமணம் நடந்தால் பணநெருக்கடிக்கிடையே வாழ வேண்டும் என்பதாலும் இவரின் காதலை மறந்து விட்டு வேறொருவருடன் திருமணம் செய்து கொள்கிறார்.

தங்கை(ஜெயா) யின் திருமணத்திற்கு சிறிது நகை போடுவதாக சொல்கிறார். சுருளி ராஜன் தான் சொல்லும் பெண்ணை (படாபட் மகாலட்சுமி) திருமணம் செய்து கொண்டால் ரூ 5000 உடனே கிடைக்கும் என்று கூறுகிறார். தங்கையின் திருமணத்திற்கு பணநெருக்கடியில் இருப்பதால் இத்திருமணத்திற்கு ரஜினி உடனே ஒப்புக்கொள்கிறார். படாபட் மகாலட்சுமி குடும்பத்தார் ரூ 5000 தருவதாக சொல்லவில்லை இது சுருளி சொன்னது.

கடும் சிரமம்பப்பட்டு தங்கையின் திருமணத்தை நடத்துகிறார். பெரிய தம்பி எல். ஐ. சி நரசிம்மன் முதல் வகுப்பில் கல்லூரியில் தேர்ச்சிபெறுகிறார். அவர் தன் நண்பனின் உதவியால் அதிக சம்பளம் கிடைக்கும் வேலையில் சேர்கிறார். ஆனால் அவர் குடும்பத்திற்காக பணம் கொடுக்காமல் தனக்காக விலையுயர்ந்த பொருட்களை வாங்கிக்கொள்கிறார். அண்ணனுடன் மனவருத்தம் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். இளைய தம்பியும் (சக்ரவர்த்தி) வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

இவர் வேலை செய்த நிறுவனத்தில் முதலாளி மகன் பொறுப்பெடுத்துக்கொள்கிறார். இதுவரை வாங்கிய பணத்தை கட்டினால் தான் வேலைக்கு வரலாம் அதுவரை வர தடைவிதிக்கிறார். முதலாளி பக்கவாதம் ஏற்பட்டு படுத்தபடுக்கையாகி விடுகிறார். தம்பி தங்கைகள் இவரை மதிப்பதில்லை மேலும் இவர் அவர்களை பார்கச் செல்லுவதையும் வெறுக்கிறார்கள். பெரிய தம்பி தன் திருமணத்திற்கு நேரில் வந்து அழைக்காமல் அழைப்பிதழை அஞ்சல் வழி அனுப்புகிறார்.

வறுமையின் காரணமாக இவர்கள் சேரிப்பகுதியில் குடிபுகுகின்றனர். நண்பன் சோ உதவியால் அச்சகத்தில் மெய்ப்புத் திருத்தல் வேலை கிடைக்கிறது. அங்கு தான் எழுதிய கதை ஒன்றை வெளியிடமுடியுமா என்று கேட்கிறார். அக்கதை வெளியாவதற்குள் தீ விபத்தில் இவர்களின் இரு குழந்தைகளை காப்பாற்றிவிட்டு படாபட் இறந்துவிடுகிறார். அவர் இறந்ததால் அவரின் காப்பீட்டுத்தொகை ரஜினிக்கு கிடைக்கிறது. இவரின் கதைக்கு நல்ல வரவேற்பு நிறைய கதைகள் எழுதுகிறார் எல்லாம் நல்ல வரவேற்பை பெறுகின்றன. நல்ல வசதியான நிலைக்கு உயர்கிறார். தம்பி தங்கைகள் இவரை தங்கள் அண்ணன் என்று எங்கும் பெருமையாக சொல்லிக்கொள்கின்றனர்.

javascript

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்